Memes: சம்மர் ஆரம்பிச்சாச்சு பள்ளி குழந்தைகளுக்கு லீவும் விட்டாச்சு. இதனால் வீடுகளில் அவர்களின் அலப்பறைகள் அதிகமாக இருக்கிறது.

ரெண்டு நாள் லீவு விட்டாலே இவனுங்க தொல்லை தாங்க முடியாது. இதுல ரெண்டு மாசம் வேறயா என அம்மாக்கள் மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக புலம்பி வருகின்றனர்.

அது போதாது என்று வெயிலின் தாக்கம் வேறு நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. பேன் ஏசி இல்லாமல் ஐந்து நிமிடம் கூட இருக்க முடியவில்லை.

இதுல அக்னி நட்சத்திரம் வேற அடுத்த மாசம் வரப்போகுது. இப்பவே சூரியன் இந்த காட்டு காட்டுது கத்திரி வெயில் எப்படி இருக்குமோ தெரியவில்லை.

இதை வழக்கம் போல நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இந்த நிலாவுக்கு அமாவாசைன்னு ஒன்னு வருது.

அந்த மாதிரி சூரியனுக்கு ஒன்னும் இல்லையாடா. மாலா ஃபேன 12ல வைடி எரிச்ச தாங்க முடியல என வடிவேலு ஸ்டைலில் அனத்தி கொண்டு இருக்கின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் சம்மர் மீம்ஸ் இதோ.