Memes: மாச கடைசி வந்தாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். அதிலும் இந்த வருடம் ஆரம்பித்ததும் தெரியவில்லை ஏழு மாசம் முடியப் போவதும் தெரியவில்லை.

அந்த அளவுக்கு வேகமாக ஓடுதுன்னு நம்ம நெனச்சிட்டு இருப்போம். ஆனா வருஷம் என்னவோ அப்படியே தான் நகருது. நம்ம தான் எதுவுமே பண்ணாம ஒவ்வொரு மாசத்தையும் நகர்த்திக்கிட்டே இருக்கோம்.

இப்படி பல பேர் உண்டு. அதில் இந்த ஜூலை மாதம் மட்டும் இன்னும் முடியவே மாட்டேங்குதே என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். உண்மையில் இத்தனை நாட்கள் ஓட்டிட்டோம் கடைசி இரண்டு நாள் நகர்வது ஆமை போல் இருக்கிறது.

அதிலும் கையில் காசு இல்லாமல் இந்த நாளை ஓட்டுவது பெரும் கொடுமைதான். அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்களும் உண்டு. இதை இணையவாசிகள் வெரைட்டியாக மீம்ஸ் போட்டு கொண்டாடி மகிழ்கின்றனர்.

அதில் எதிர்நீச்சல் குணசேகரன் சொல்வது போல் இந்தாம்மா ஏய் நீ என்ன இவ்ளோ ஸ்லோவா போற எப்ப முடிவ என்ற ட்ரெண்டில் இருக்கிறது.

அதே போல் என்னடி இது இப்படி இழுத்துகிட்டு இருக்கு இன்னும் முடிய மாட்டேங்குது என எம்டன் மகன் டெம்ப்லேட் போட்ட மீம்ஸ் கலை கட்டி வருகிறது.

இப்படியாக எவ்ளோ தள்ளுனாலும் போகவே மாட்டேங்குது என ஜூலை மாதத்தை வைத்து செய்து வரும் சோசியல் மீடியா மீம்ஸ் தொகுப்பு இதோ.