ஒரே பாட்டுல பணக்காரங்களா மாறுன ஜோடிய.. படம் முழுக்க வீடு வாங்க கஷ்டப்பட வச்சிட்டீங்களேடா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: சீரியஸான விஷயத்தை கூட காமெடியாக மாற்றக்கூடிய திறமை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு உண்டு. அப்படித்தான் இப்போது 3BHK படத்தையும் கலாய்த்து வருகின்றனர்.

சூரியவம்சம் எவர்கிரீன் ஜோடியான சரத்குமார் தேவயானி நடிப்பில் வெளிவந்த இப்படம் பரவலான வரவேற்பை பெற்றது. ஒரு வீடு வாங்குவது எவ்வளவு கஷ்டம் என்பதை பற்றி சொல்லும் படமாக இது இருந்தது.

பார்ப்பதற்கு நம் சொந்த வாழ்க்கை போல் இருந்தாலும் கூட சில விஷயங்கள் இருக்குதே என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதாவது 20 வருஷத்துக்கு முன்னாடியே மாசம் 25000 சேர்க்க முடியும்னா நீங்க எப்படி மிடில் கிளாசா இருக்க முடியும்.

வீடு வாங்க நீங்க கஷ்டப்படுறீங்க எல்லாம் சரி. அதுக்காக சரத்குமார் சார் இப்படி சோகமாவே பேசணும்னு என்ன இருக்கு என படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

இது எல்லாம் தாண்டி சூர்யவம்சம் படத்துல ஒரே பாட்டுல பணக்காரங்களா வந்த ஜோடி தான் இவங்க. அவங்கள ஒரு வீடு வாங்குறதுக்கு படம் ஃபுல்லா கஷ்டப்பட வச்சிட்டீங்களேடா என பல மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது.

இப்படியாக சோசியல் மீடியாவை அதகளம் பண்ணும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.