Memes: ஹிந்தி எதிர்ப்பு, மும்மொழிக் கொள்கை பற்றிய விவாதங்களும் சர்ச்சைகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.

அதில் தற்போது மும்மொழி கல்வி கொள்கை குறித்து நீயா நானா நிகழ்வில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. நேற்று ஒளிபரப்பாகி இருக்க வேண்டிய எபிசோட் தான் அது.

ஆனால் ஆளும் கட்சியினரின் அதிகாரத்தால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கருத்து சுதந்திரம் கிடையாதா என நெட்டிசன்கள் மத்திய அரசை எதிர்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுபோக கோபிநாத்தையும் ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

ஏனென்றால் அவர் நடித்த நிமிர்ந்து நில் படத்தில் இதேபோன்று ஒரு நிகழ்வு வரும். அப்போது எதா இருந்தாலும் பாத்துக்கலாம் என அவர் துணிந்து செயல்படுவார்.

ஆனால் சினிமாவில் ஒரு மாதிரி நிஜத்துல ஒரு மாதிரி இதுக்கெல்லாம் பயந்துட்டீங்களே என அவரையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை.
மேலும் Ai grok நெட்டிசன்கள் கேட்கும் அத்தனை தகவலையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படுகின்றன.
இப்படி எல்லா வண்டவாளத்தையும் அம்பலப்படுத்துறியே, விகடன், நீயா நானா மாதிரி உன்னையும் பிளாக் பண்ணிட்டா சோத்துக்கு என்ன பண்ணுவ grok என இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.
ஆனால் அதற்கும் பதிலளித்திருக்கிறது grok. என்னை முடக்கினாலும் வேறு வழியில் வந்து உண்மையை அம்பலமாக்குவேன் என்ற பதிலை பார்த்ததும் நீ கலக்குமாமே என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படி தற்போதைய பிரச்சனைகளை மையப்படுத்திய சில மீம்ஸ் தொகுப்பு இதோ.