Memes: சோசியல் மீடியாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி தோல்வி இதன் கையில் இருக்கிறது என சொல்லும் அளவிற்கு தற்போதைய நிலவரம் உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை மக்களின் குரலாக வெளிக்கொண்டுவரும் சேனல்களும் இருக்கிறது. அப்படித்தான் கோபி, சுதாகரின் பரிதாபங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அரசியல் ரீதியாக இவர்கள் கொடுக்கும் கன்டென்ட் வேற லெவலில் ரீச் ஆகிறது. திருப்பதி லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த போது இவர்கள் அதை வைத்து வீடியோ போட்டனர்.

ஆனால் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. அதற்கு முன்பே பல கோடி பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது அந்த வீடியோ.

அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது. சமீபத்தில் இளைஞர் கவின் ஆணவ கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எல்லா பக்கம் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தது.

ஆனால் உண்மையிலேயே இதன் பின்னணி என்ன என்பதை பரிதாபங்கள் வீடியோ போட்டு உடைத்திருக்கிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவர்கள் போட்டுள்ள வீடியோ படு வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அதை ரசிக்கும் நெட்டிசன்கள் லாக்கப் டெத் பத்தியும் ஒரு வீடியோ போட்டு இருக்கலாம் என ஆதங்கத்துடன் கேட்டு வருகின்றனர். ஆனால் அப்பா கோச்சுக்குவாரு.
இந்த வீடியோ எப்ப வேணும்னாலும் டெலிட் செய்யப்படலாம் என்ற கமெண்ட்டுகளும் வந்து கொண்டிருக்கிறது. இப்படி இந்த வீடியோ தொடர்பாக வைரல் ஆகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.