Memes: கடந்த வாரம் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியானது. இப்போது வரை படம் தியேட்டர்களில் ரசிகர்களால் வெறித்தனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஃபேமிலி ஆடியன்ஸ் கூட படத்தை என்ஜாய் செய்து பார்த்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் படத்தில் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க ஆசைப்பட்டோமோ அப்படி எல்லாம் செதுக்கியிருக்கிறார் ஆதிக்.

அது மட்டும் இன்றி நாம் பார்த்து ரசித்த பழைய பாடல்களை சேர்த்தது தான் ஹைலைட். அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா இளசுகளை ஆட வைத்துள்ளது.

இப்போது இருக்கும் 2கே கிட்ஸ் சிம்ரனை விட பிரியா தான் சூப்பர் என ஃபயர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன தெரியும் இடுப்பழகியின் ஒரு ஹிப் டான்ஸ்க்கு ஈடாகுமா இந்த பொண்ணு ஆட்டம்.

இதெல்லாம் தெரியாமல் சிம்ரனை விட பிரியா தான் பெஸ்ட் என கூவிக் கொண்டிருக்கின்றனர். இதை 90ஸ் கிட்ஸ் வன்மையாக கண்டிக்கின்றனர்.

நீங்க பாட்டை ரசிங்க வேணாம்னு சொல்லல. ஆனா பிரியாவை சிம்ரன் கூட எல்லாம் கம்பேர் பண்ணாதீங்கடா 2k கிட்ஸ்.

எங்க தலைவியை பத்தி தெரியுமா. அந்த அம்மா டான்ஸ் பத்தி தெரியுமா. பிரியா வாரியார் எல்லாம் ஓரமா போய் விளையாடனும்.
எத்தனை வருஷம் ஆனாலும் எங்க தலைவி சிம்ரன் டான்ஸ்க்கு முன்னாடி யாரும் நிற்க கூட முடியாது என கமெண்ட்டுகளில் வந்து கொதிக்கின்றனர்.
இப்படி சிம்ரனின் வெறியர்கள் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் பற்றி வைரல் செய்யும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.