Memes: சமீபகாலமாக சிவகார்த்திகேயன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். அவர் பற்றிய செய்திகளோ அல்லது போட்டோக்கள் வீடியோக்கள் என ஏதாவது ஒன்று வெளியாகி வருகிறது.

அதில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி குழுவினரை இவர் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். அந்த வீடியோ வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

தலைவராவே தன்னை நினைத்துக் கொண்டார் போல. இதான் கங்கா சந்திரமுகியா மாறிய தருணம். விட்டா தலைவர கூப்பிட்டு பாராட்டுவார் போல இருக்கே.

இப்படி நெட்டிசன்கள் சகட்டுமேனிட்டு கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இப்படி எல்லாம் செஞ்சா தலைவர் ரேஞ்சுக்கு வர முடியாது என ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் கொந்தளிக்கின்றனர். அதே சமயம் சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

எது எப்படியோ இது சம்பந்தமான மீம்ஸ் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. அதில் சில உங்களுக்காக.
