சீயான் நினைச்சா ஈலோகத்தில் யார் மாதிரி வேணாலும் நடிக்க முடியும்.. ஆனா யாராலும் சீயான் மாதிரி நடிக்க முடியாது சாரே, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் கடந்த 27ஆம் தேதி வெளியானது. பல்வேறு தடைகளை தாண்டி மாலையில் தான் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது.

ஆனாலும் படத்தை பார்த்துட்டு தான் வீட்டுக்கு போவோம் என அவரின் ரசிகர்கள் தியேட்டர் வாசலிலேயே தவம் இருந்தனர். அதைத்தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களும் வர தொடங்கியது.

தற்போது படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் விக்ரமுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தரமான ஒரு வெற்றி கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயம் நெட்டிசன்கள் சில மீம்ஸ்களையும் ஷேர் செய்து வருகின்றனர். அதில் எந்த ஆரவாரமும் இல்லாமல் வெளியாகி விடாமுயற்சி ஜெயித்துள்ளது.

ஆனால் குட் பேட் அக்லி பெரும் அலப்பரையாக இருக்கிறது. என்ன நடக்க போகுதோ என கிண்டல் அடித்து வருகின்றனர்.

அதேபோல் வீரதீர சூரன் ஒழுங்கா ஜனவரி மாசம் ரிலீஸ் ஆகி இருக்கும். ஆனா விடாமுயற்சி வருதுன்னு தள்ளிப் போனா கடைசில அந்த படம் ஓடல என ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதற்கு அஜித் ரசிகர்கள் நீங்க எதுக்காக பயந்து மார்ச் பக்கம் போனீங்க என பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்படி சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Leave a Comment