ராணுவத்தை விட டிவி சேனல் ரொம்ப உக்கிரமா இருக்காங்க.. பிதாமகன் விக்ரம் மாதிரி தீவிரவாதி சங்க கடிச்சு கொன்றுவாங்க போல, வைரல் மீம்ஸ்

Memes: இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்று வருகிறது. அதில் பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து இந்தியா சாமர்த்தியமாக சமாளித்து வருகிறது.

நாட்டுக்காக இந்திய ராணுவ வீரர்கள் கடுமையாக போரிட்டு வருகின்றனர். அதேபோல் வீர மரணம் அடைந்தவர்களும் உண்டு.

இதனால் நாடு முழுவதும் ஒரு பதட்ட நிலை இருக்கிறது. ஆனால் அதைக்கூட சமாளித்து விடுவோம் போல டிவி சேனல்கள் கொடுக்கும் அலப்பறை தான் தாங்க முடியவில்லை.

அதிலும் முக்கிய சேனல் ஒன்று இல்லாததை கூட சொல்லி மக்களை பீதி அடைய வைக்கின்றனர். அதிலும் பொய்யான வீடியோக்கள் கூட ஒளிபரப்பப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

நாங்க மட்டும் என்ன சும்மாவா என போட்டி சேனல்களும் இப்போது போர் பற்றிய செய்திகளை தான் மும்முரமாக ஒளிபரப்பி வருகிறது.

இந்திய ராணுவத்தை விட இவங்க தான் ரொம்ப உக்கிரமா இருக்காங்க. விட்டா பிதாமகன் விக்ரம் கிளைமாக்ஸ்ல வில்லன கடிச்சு கொதருற மாதிரி பாகிஸ்தான் தீவிரவாதி சங்க கடிச்சு துப்பிருவாங்க போல.

இவங்கள பாத்தா தான் அதிக பயமா இருக்கு என நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர். அதேபோல் எப்பா டேய் பாகிஸ்தான் முதல்ல அந்த டிவி சேனல் மேலே ஏதாவது ஒரு குண்டா போடுங்க.

உங்களுக்கு புண்ணியமா போகும் என சிலர் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இப்படி சோசியல் மீடியாவில் போர் சம்பந்தப்பட்ட பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.