வாட்டர் மெலன் ஸ்டார நசுக்கிட்டாங்க.. இத வச்சே பிக்பாஸ் 9-க்கு போயிடுவாரோ, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: சோசியல் மீடியாவின் ஆதிக்கம் இப்போது அதிகமாகி விட்டது. திறமை இல்லாதவர்கள் கூட ஏதாவது ஒரு கோமாளித்தனம் தயவுசெய்து இதன் மூலம் பேமஸ் ஆகி விடுகின்றனர்.

அவர்களை வளர்த்து விடுவதில் யூடியுப் சேனல்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. என்ன கன்டென்ட் கிடைக்கும் அதை வைத்து காசு பார்க்கலாம் என்ற நோக்கத்தோடு கேமராவை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலம் பிரபலமானவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அப்படித்தான் வாட்டர் மெலன் ஸ்டார் என தனக்குத்தானே பட்டம் கொடுத்து கொண்டு பேமஸ் ஆகி இருக்கிறார் திவாகர்.

டாக்டர் ஆன இவர் அந்த வேலையை பார்க்கிறாரோ இல்லையோ யாரையாவது வம்புக்கு இழுப்பதை பெரும் வேலையாக செய்து வருகிறார். அதிலும் கஜினி படத்தில் சூர்யாவின் வாட்டர் மெலன் சீனை நடித்துதான் இவர் ஃபேமஸானார்.

இப்போது கருப்பு படத்தில் அதே சீன் இருக்கிறது. ஆனால் இந்த திவாகர் சூர்யா இவரை பார்த்து காப்பியடித்தது போல் அலப்பறை கொடுத்து வருகிறார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்றபோது கூட ஓவர் சீன் போட்டு பிரச்சனை செய்தார். அதுதான் இப்போது அவரை ட்ரோல் செய்யும் அளவுக்கு கொண்டு வந்து விட்டது.

வாட்டர் மெலன் ஸ்டார நசுக்கிட்டாங்க இதை வச்சு பிக் பாஸ் 9க்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்ல. அப்படி மட்டும் நடந்துச்சுன்னா ஆடியன்ஸ் நிலைமை படு மோசம். இவர கையிலேயே பிடிக்க முடியாது என பல ட்ரோல் மீம்ஸ் வைரலாகி வருகிறது.

இப்படி சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கும் வாட்டர் மெலன் ஸ்டார் பற்றிய சில மீம்ஸ் தொகுப்பு இதோ.