குண்டா இருக்குறன்னு பரோட்டா கடைக்காரன் இட்லி கடைகாரனுக்கு பொண்டாட்டியா நடிக்க வைக்கிறீங்களேடா.. ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: சோசியல் மீடியாவில் ஒவ்வொரு நாளும் வரும் புதுப்புது பஞ்சாயத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் வாட்டர் மெலன் ஸ்டார் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க போய் அசிங்கப்பட்டார்.

அது இன்னும் கூட ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதை போல் கடந்த வாரம் வெளியான தலைவன் தலைவி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே சமயம் அந்த படத்தை நெட்டிசன்கள் கிண்டலடித்தும் வருகின்றனர். வீட்ல பொண்டாட்டியோட சண்டை போட்டுக்கிட்டு தியேட்டருக்கு போனால் அங்கேயும் புருஷன் பொண்டாட்டி சண்டை தான் நடக்குது.

கொஞ்சம் குண்டா இருக்கிற பாவத்துக்கு பரோட்டா கடைக்காரன் இட்லி கடைக்காரனுக்கு எல்லாம் பொண்டாட்டியா நடிக்க வைக்கிறீங்களே. நியாயமா என நித்யா மேனன் கேட்பது போன்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.

ஏனென்றால் அடுத்ததாக தனுசுடன் அவர் நடித்திருக்கும் இட்லி கடை வெளிவர இருக்கிறது. அந்த படத்திலும் வெள்ளந்தியான கிராமத்து பெண் வேடம்தான். இந்த மாதிரி கேரக்டருக்காகவே அளவெடுத்து செய்தவர் போல் இருக்கிறார் நித்யா மேனன்.

அதனாலயே இப்படியான கேரக்டர்கள் அவரை தேடி வருகிறது. அதைத்தான் நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கிண்டல் அடிக்கின்றனர். அப்படி இணையத்தில் வைரலாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.