தங்கம் விலை ஏறிடுச்சின்னு வருத்தப்படுறதா.. இல்ல அடகு வச்சா அதிக பணம் கிடைக்கும்னு சந்தோஷப்படுறதா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயரத்தை எட்டி இருக்கிறது. கடந்த வருட இறுதியில் அதிகரிக்க தொடங்கிய விலை தற்போது உச்சகட்டத்தில் உள்ளது.

அதிலும் இன்று கிராம் 8920 ரூபாயாக இருக்கிறது. இதனால் நகை விரும்பிகளும் நடுத்தர வர்க்கத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

இப்படியே போனால் யார் தான் தங்கம் வாங்குவது என்ற கேள்வியும் இருக்கிறது. அந்த வருத்தத்தை கூட நகைச்சுவையாக கமெண்டில் கொட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இப்ப தங்கம் விலை ஏறிடுச்சின்னு கவலைப்படறதா இல்ல, இருக்கிற நகையை அடகு கடையில் வச்சா அதிக பணம் கிடைக்கும்னு சந்தோஷப்படுறதா தெரியலையே.

சும்மாவே எங்களுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க. இதுல தங்கம் விலை வேற ஏறிடுச்சு கல்யாணம் நடக்கிறது கஷ்டம் தான்.

இப்படியாக மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். இவர் ரணகளத்திலும் ஒரு குதூகலமாக தான் இருக்கின்றனர்.

இவ்வாறு சோசியல் மீடியாவில் தங்கம் விலை உயர்வை பற்றி பரவி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.