Memes: சோசியல் மீடியாவில் எப்போதுமே ஏதாவது ஒரு பஞ்சாயத்து பற்றி எரியும். ஆனால் தற்போது த்ரிஷா பற்ற வைத்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது.

நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பல பிரபலங்கள் அவருடன் இணைந்து எடுத்த போட்டோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் திரிஷாவின் வாழ்த்துக்கு தான் ஒட்டு மொத்த மீடியாவும் காத்திருந்தது.

அவர்களை ஏமாற்றாமல் விஜய்யுடன் இணைந்து எடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டு அவர் ஸ்பெஷலாக வாழ்த்து சொன்னார். இதற்காகவே காத்திருந்த மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இதை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

உங்க ரசிகர்கள் வீட்டு வாசலில் காத்துகிட்டு இருக்காங்க. ஆனால் திரிஷா கூட பர்த்டே செலிப்ரே பண்ணிருக்கீங்க. தொண்டர்கள் ரசிகர்களை விட இதுதான் முக்கியமா என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னும் சிலர் வதந்தி உண்மை என த்ரிஷா உறுதிப்படுத்திட்டாங்க. இவர்தான் ஒரிஜினல் ரங்கராய சக்திவேல் என வழக்கம் போல விஜய்யை டார்கெட் செய்து வருகின்றனர்.

ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் எல்லாத்தையும் தப்பாவே பாக்குற உங்க கண்ணுல தான் கோளாறு. அவங்க பிரண்ட்ஸா தான் பழகுறாங்க என சப்போர்ட் செய்து வருகின்றனர்.

ஆக சோசியல் மீடியாவில் பஞ்சாயத்து ஆகும் என்று தெரிந்தே திரிஷா இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கிறார் போல. இது எல்லோருக்கும் செம கன்டென்ட் ஆக சிக்கிவிட்டது.

அதன்படி சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.
