யாருமே இடியாப்பம் வாங்கல.. எட்டி பாக்குறதுக்குள்ள 8 கிலோமீட்டர் தாண்டி போனா யாருடா வாங்குவா, வைரல் மீம்ஸ்

Memes: இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வீடியோ என்றால் அது இடியாப்பக்கார அண்ணாச்சியின் அட்ராசிட்டி தான். இவர் மேல் கோவத்தில் இருப்பவர்கள் ஏராளம்.

கிராமப்புறங்களில் தொடங்கி சிட்டி வரை இடியாப்ப வியாபாரம் களை கட்டுகிறது. அதிலும் காலை மாலை என வண்டியை எடுத்துக்கொண்டு அண்ணாச்சி வந்து விடுவார்.

ஆனால் அவரை கண்ணில் பார்ப்பது அவ்வளவு எளிது கிடையாது. இடியாப்பம் என்ற சவுண்டை கேட்டுவிட்டு பாத்திரத்தையும் காசையும் எடுத்துட்டு வர்றதுக்குள்ள அண்ணன் சிட்டா பறந்துடுவார்.

ஒரு நாள் ரெண்டு நாள் கிடையாது எல்லா நாளும் இதே அளப்பறை தான். இப்படியே போனா யாரு தான் இவர்ட்ட வாங்குவா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இதை சோசியல் மீடியா மக்கள் வீடியோ எடுத்து கலாய்த்து வருகின்றனர். அதிலும் சிலர் ஒரு வழியா இடியாப்ப அண்ணாவை பிடிச்சிட்டோம் என போட்டோவுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும் சிலர் இடியாப்பம்னு சொல்லி ஆசை காட்டிட்டு ஏமாத்திட்டா போற, இன்னைக்கு வருஷமா சிக்குனியா. உனக்கு எப்படி தான் வியாபாரம் ஆகுது என கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் சில இடியாப்ப மீம்ஸ் இதோ உங்களுக்காக.