IPL Memes: ஐபிஎல் திருவிழா தொடங்கிவிட்டது. இதற்காகவே காத்திருந்த கிரிக்கெட் வெறியர்கள் தற்போது தங்கள் அணிக்காக சப்போர்ட் செய்து வருகின்றனர்.

இதில் சிஎஸ்கே அணிக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தல தோனிக்காக தானா சேர்ந்த கூட்டம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆனால் இந்த வருடம் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தோல்வியடைந்தது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. சின்னப் பிள்ளைங்க கூட கலாய்க்கும் அளவுக்கு இருக்கிறது அணியின் நிலை.

அதேபோல் தோனி ரிட்டயர்மென்ட் வாங்கிட்டு போனால் நல்லது என்று கூட ட்ரோல் மீம்ஸ் வந்தது. இது முத்துப்பாண்டி கோட்டை டா, அடிச்சதே முத்துபாண்டிய தாண்டா என நக்கல் அடித்து வருகின்றனர்.

அதேபோல் ஆயிரக்கணக்கில் டிக்கெட் எடுக்க போனவர்கள் கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். இது அத்தனையும் குமுறலாக மீடியா முன்பு அவர்கள் கொட்டி தீர்த்த சம்பவத்தையும் பார்த்தோம்.

இப்படியாக இந்த வருட ஐபிஎல் பல எதிர்பாராத ட்விஸ்ட் கொடுக்கிறது. அதில் இணையத்தில் பரவும் மீம்ஸ் நம்மை கவனம் இருக்கிறது.

ஐபிஎல் பாருங்க ப்ரோ டிப்ரஷன் எல்லாம் காணாம போயிடும். நான் டிப்ரஷன் ஆனதே ஐபிஎல் பார்த்து தாண்டா என நம்மை ரசிக்க வைக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.