Memes: இந்த வருடம் ஐபிஎல் போட்டியை எதிர்பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் நொந்து போய் இருக்கின்றனர். அந்த அளவுக்கு அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

அதிலும் இந்த முறை எதிர்பார்க்காத பிரபலங்கள் எல்லாம் போட்டியை நேரில் காண சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வருகின்றனர்.

ஆனால் அணியின் தோல்வி எல்லோரையும் ஏமாற்றி வருகிறது. அதில் நேற்று அஜித் குடும்பத்துடன் கிரிக்கெட் மேட்சை பார்க்க சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார்.

அதையடுத்து ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் வந்திருந்தனர். ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் கவனம் ஏகே மீது தான் இருந்தது.

அவரும் ரசிகர்களுக்கு சிரித்தபடி கைகாட்டி ஹார்ட் காண்பித்து ஆச்சரியப்படுத்தினார். எங்கும் வெளியில் வராத மனுஷன் வந்ததும் அங்கு ஒரே உற்சாக குரல்கள் எழுந்தது.

இந்த அலப்பறையில் நேற்று அணி தோற்றுப் போனதை கூட அனைவரும் மறந்து விட்டார்கள். இல்லை என்றால் அடுத்த நிமிடத்தில் இருந்து ட்ரோல் மீம்ஸ் பறக்க தொடங்கி விடும்.

ஆனால் AK பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்ததில் சிஎஸ்கே அணி நல்ல வேளையாக தப்பிவிட்டது. இதை நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.
அப்படி இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.