குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் இருக்கும் மெத்தனால்.. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு மக்களே

Reduce this kind of foods: டேஸ்ட்டாக இருக்கிறது சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று கெடுதல் என தெரிந்தும் பலரும் பல உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அது எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகிவிடும் என்பதற்கு உதாரணம் பல விளைவுகளை அனுபவித்து வருகிறோம். அப்படித்தான் ஒரு உணவுக்கு அனைவரும் அடிமை என்று சொல்லும் அளவிற்கு நம்மளை ஆட்டிப் படைக்கிறது பரோட்டா.

இதில் என்னதான் தீமைகள் இருக்கிறது என்று தெரிந்தாலும் இதை வாரத்துக்கு ஒருமுறையாவது சாப்பிட்டாக வேண்டும் என்று வாய் துடிக்கிறது. அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று அதை வாங்கி சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே மாதிரி குழந்தைகள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளிலும் பேராபத்து இருக்கிறது.

டேஸ்ட்டுக்காக உணவுகளில் அதிகமாக சேர்க்கும் மெத்தனால்

தற்போது கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயம் குடித்து கிட்டத்தட்ட 50 பேருக்கும் மேல் உயிரை இழந்து இருக்கிறார்கள். 110 பேருக்கு மேல் உடல் நல பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். இந்த ஒரு துயர சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு பின்னணியில் இருப்பது வேதியல் பொருளாக இருக்கும் மெத்தனால் அதிகமாக கலந்ததால் தான் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதே மெத்தனால் நாம் விரும்பி சாப்பிடும் உணவுகளிலும் இருக்கிறது என்று மருத்துவர் கூறியுள்ளார். அதாவது ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் போன்ற வேதிப்பொருட்கள் கலந்து தான் மெத்தனால்.

இந்த மெத்தனால் பிளாஸ்டிக் பெயிண்ட், அழகு சாதனப் பொருட்கள், பூச்சிக்கொல்லி, வார்னிஷ், துணி துவைக்கும் லிக்யூட் போன்ற அனைத்திலும் மெத்தனால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்ல போனால் வாகனங்களுக்கு எரிபொருளாக கூட மெத்தனால் பயன்படுத்துகிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த மெத்தனால் நம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருள்களிலும் இருக்கிறது. அதாவது இயற்கையிலேயே வரக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகள் கூட இருக்கிறது. இவ்வளோ ஏன் நமது உடலில் கூட இருக்கிறது. அந்த வகையில் அதிகமாக இருக்கக்கூடிய மெத்தனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குளிர்பாகனங்ள், ஜாஸ், ஜாம், மைனஸ் போன்றவற்றிலும் அதிகமாக கலக்கப்பட்டு இருக்கிறது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதற்கு ஏற்ப அதிகமாக மெத்தனால் பயன்படுத்தும் பொழுது சில உடல்களில் ஏற்படும் மாற்றத்தினால் உயிருக்கு ஆபத்துகளை உண்டாக்குகிறது. எதற்காக இந்த மெத்தனாவை உணவுகளில் சேர்க்கிறார்கள் என்றால் இதை சேர்த்தால் சுவை அதிகரிக்கும் திரும்பத் திரும்ப சாப்பிடவும் தோன்றும். இதனால் கண்ணெரிச்சல், பார்வை குறைபாடு, வாந்தி, மூச்சுத்திணறல், வயிற்று வலி ஆகிய குறைபாடுகள் ஏற்பட்டு உயிரைக் கொல்லும் விஷமாக மாறிவிடுகிறது.

மேலும் மது, சாராயம் ஆகியவற்றில் நொதித்தல் நடக்கும் போது தானாகவே அதில் மெத்தனா உருவாகிவிடுகிறது. இதையும் தாண்டி சுவைக்காகவும், போதைக்காகவும் மெத்தனால் அதிகம் சேர்க்கும் போது தான் மரணம் நிகழ்கிறது. இதனால் மெத்தனால் கலந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகள்

Next Story

- Advertisement -