Mettioli Actress: சமீப காலமாகவே திரைத் துறையில் இருக்கும் பிரபலங்கள் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். அதில் சின்னத்திரை, பெரிய திரை என்ற பாகுபாடு இல்லாமல் பலரும் இந்த தொல்லையை கடந்து தான் வந்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது மெட்டி ஒலி சீரியலின் மூலம் பிரபலமான லதா ராவ் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இப்போது எல்லாம் பிரபலங்களை பேட்டி எடுக்கிறார்கள் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லையை சந்தித்திருக்கிறீர்களா என்ற கேள்வி கட்டாயமாக கேட்கப்படுகிறது.
Also read: ஒரே நாளில் உயிரை விட்ட உடன்பிறப்புகள்.. மீளா துயரில் மெட்டிஒலி போஸ் வெங்கட்
அப்படித்தான் லதா ராவும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் சில பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சீரியலில் வில்லி கதாபாத்திரம் உட்பட அத்தனை கேரக்டர்களிலும் அசத்தி வந்த இவர் பெரிய திரையிலும் தில்லாலங்கடி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
அப்படி ஒரு முறை இவருக்கு பெரிய கூட்டணி இணையும் படத்திலிருந்து வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் அதை வேண்டாம் என்று இவர் மறுத்துவிட்டாராம். அதைப்பற்றி கூறியிருக்கும் லதா ராவ் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் சினிமாவில் மட்டுமல்லாமல் எல்லா துறையிலும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Also read: இந்த 3 காரணங்களால் இளம் வயதில் உயிரை விட்ட மெட்டி ஒலி விஜி.. காதலை தொலைத்து உயிர் போனது தான் மிச்சம்
மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய விருப்பம் இல்லை என்றால் யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. அந்த மாதிரி தான் நோ என்று சொல்லிவிட்டால் மயக்க மருந்து கொடுத்து தூக்கிட்டு போய் பலவந்தப்படுத்தும் வேலையெல்லாம் நடக்காது.
அதுமட்டுமல்லாமல் யாரும் நம்மை தொடர்ந்து வர மாட்டார்கள். நீ இல்லை என்றால் வேறு ஒருவர் என்று போய்விடுவார்கள் என அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் இவருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை வந்தது அதிர்ச்சியாக இருந்தாலும் இவரின் வெளிப்படையான பேட்டி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.
Also read: திகட்ட திகட்ட கணவரை காதலித்த ஸ்ருதி.. மனதை கனக்க வைத்த கடைசி விளம்பர வீடியோ!