செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025

மெட்டி ஒலி சீரியல் லீலாவை நியாபகம் இருக்கா?. சூர்யாவால் மொத்தமாய் காலியான சினிமா கேரியர்!

Serial: மெட்டி ஒலி சீரியலில் நடித்த எந்த ஒரு கேரக்டரையும் நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அப்படி ஒரு கேரக்டர் தான் சிதம்பரத்தின் மூன்றாவது மகள் லீலா. இந்த கேரக்டரில் நடித்தவர் நடிகை வனஜா.

இவருக்கு இதுதான் முதல் சீரியல் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

திருமணத்திற்கு முன்பு வரைக்கும் ரொம்பவும் தைரியமான துருதுறு பெண்ணாக இருப்பார். செல்வம் மற்றும் லீலா காதல் காட்சிகள் இந்த சீரியலின் பெரிய பாசிட்டிவ்.

மொத்தமாய் காலியான சினிமா கேரியர்!

குடும்ப சூழ்நிலை காரணமாக ரவியை திருமணம் செய்து கொள்வது, ரவியின் சந்தேக புத்தியால் படாதபாடு பட்டு அழுவது என அந்த பழைய லீலா மொத்தமாக மாறி இருப்பார்.

இந்த சீரியலுக்குப் பிறகு சன் டிவியில் நடிகை வனஜா இல்லாத சீரியலே இல்லை எனும் அளவுக்கு இருந்தது.

வனஜா அவருடைய கேரியரில் ஒரே ஒரு படத்தில் தான் நடித்தார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படம் தான் அது.

அதில் அவர் ஏற்று நடித்த கேரக்டர் அவருக்கு பிடிக்கவே இல்லையாம். இயக்குனரின் வற்புறுத்தலால் என்ன செய்வது என்று தெரியாமல் நடித்திருக்கிறார்.

அந்த கேரக்டரில் ஏன் நடித்தோம் என இன்று வரை வருத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

எது எப்படியோ சிங்கம் படத்தில் உதவி இயக்குனராக இருந்த பரத்குமார் என்பவரை திருமணம் செய்து தற்போது செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் அபியும் நானும் என்னும் சீரியல் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

Trending News