‘கல்விக்கண் திறந்த’ காமராசர், ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் இவர்கள் இருவருக்கும் அரசியல் கட்சிகளும், கொள்கைகளும் தான் வேறு, வேறு தவிர இருவரும் மக்களுக்கு செய்த தொண்டுகள் ஒன்று தான். காமராசர் சத்தியமூர்த்தியை அரசியல் குருவாக ஏற்று அரசியலுக்கு வந்தார். MGR அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார்.
பள்ளி வரும் குழந்தைகளுக்கு மதிய உணவளித்து கல்வியை ஊக்குவித்தார் காமராஜர். இந்த மதிய உணவு திட்டத்தையே விரிவாக்கி சத்துணவு திட்டமாக காய்கறிகள், பருப்பு, முட்டை என ஊட்டசத்து நிறைந்த உணவாக வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கீழ் இந்த திட்டம் செயல்பட்டது.
Also Read :எம்ஜிஆர் வளர்த்துவிட்ட பவுன்சர்ஸ்.. 5 மெய்க்காப்பாளர்களையும் கடைசிவரை அரவணைத்த புரட்சித்தலைவர்
காமராஜர் கல்வியில் அதிக முக்கியத்துவம் காட்டினார். எம் ஜி ஆரும் மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை வளர்த்தார். காமராஜர் இலவசக்கல்வியை கொடுத்தார். MGR பெண் கல்வியை அதிகமாக ஊக்குவித்தார். ஆதிதிராவிட/பழங்குடியின பெண் குழந்தைகளின் பள்ளி சேர்க்கையை அதிகப்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
இவர்கள் ஆட்சி காலத்தில் 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்களும் வயிறார சாப்பிட வேண்டும், வறுமையிலும் யாரும் பட்டினியாக இருக்க கூடாது என்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
Also Read :நாகேஷை தூக்கி எறிந்த பாலச்சந்தர்.. எம் ஜி ஆரால் பிரிந்து போன நட்பு
எம் ஜி ஆர் ஆட்சியில் இருந்த 13 ஆண்டுகளுமே சந்தையில் எந்த பொருள்களும் விலை ஏறவில்லை. இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு பொருள்களின் விலைகள் ஏறிக்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் எம் ஜி ஆர் ஆண்ட அத்தனை வருடங்களும் விலைவாசி ஏற்றமே இல்லை.
MGR கிராமப்புறங்களுக்கு இலவச மின்சாரம் என்னும் திட்டத்தை கொண்டுவந்தார். 100 யூனிட்டுகள் வரை வீடுகளில் இலவச மின்சாரம் எனவும், விவசாயத்திற்கு மொத்த மின்சாரமும் இலவசம் என்ற அடிப்படைகளை இந்த திட்டத்திற்கு கீழ் கொண்டு வந்தார்.
பொருள்களின் விலைவாசிகள் மட்டுமல்லாமல் MGR ஆட்சிக்காலத்தில் பஸ் மற்றும் மின்சாரக்கட்டணம் கூட ஏறவில்லை. எம் ஜி ஆரும், காமராசரும் தங்களுக்காக ஏதும் சேர்க்காமல் மக்களுக்காகவே வாழ்ந்தனர். இவர்கள் ஆண்ட காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் ஆகும்.
Also Read :60-70களில் முதன்முதலாக லட்சத்தில் சம்பளம் வாங்கிய 3 பேர்.. எம்ஜிஆர், சிவாஜி கூட இல்லப்பு