Actor Pandiyarajan: தன் நடிப்பால், தமிழ் சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நான் பாண்டியராஜன். இந்நிலையில் இவரிடம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மன்னிப்பு கேட்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
1985ல் கன்னி ராசி என்னும் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர்தான் பாண்டியராஜன். மேலும் அதே ஆண்டு ஆண்பாவம் என்னும் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து இவர் முன்னணி கதாநாயகனாக மேற்கொண்ட படங்கள் சுமாரான விமர்சனங்களை பெற்று அதன் பின் நகைச்சுவையில் களமிறங்கினார்.
இருப்பினும் தமிழ் சினிமாவில் தன் ஆரம்ப காலத்தில் தன் உருவத்தால் பட வாய்ப்பு ஏற்க மிகவும் சிரமப்பட்ட இவர் சந்தித்த அவமானங்கள் அதிகம். அதை தொடர்ந்து இயக்குனர் பாக்யராஜின் துணையோடு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டார்.
சினிமாவை தவிர்த்து இவருக்கும், பாக்யராஜுக்கும் உள்ள நட்பு பெரிதாக பேசப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் பாக்யராஜ் துணை கொண்டு செயல்பட்ட இவர் தன் படமான ஆண்பாவம் பாடத்தின் பிரிவியூ நிகழ்ச்சியில் எம்ஜிஆரை அழைக்க ஆசைப்பட்டாராம். அதைக் கொண்டு பாக்யராஜிடம் கேட்டபோது, நான் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன் எனக் கூறினாராம்.
Also Read: சல்லி சல்லியாக நொறுங்கிய ஆதிபுருஷ்.. இது என்ன பாகுபலி நாயகனுக்கு வந்த சோதனை
அதை தொடர்ந்து அன்று முதல்வராக இருந்த எம் ஜி ஆர் ஐ தன் பட நிகழ்ச்சிக்கு அழைக்க இவரே முயற்சித்துள்ளார். அதை அறிந்து எம்ஜிஆரும் சற்றும் விருப்பமில்லாமல் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம். படம் தொடக்கத்தில் சிறிதும் நாட்டம் இல்லாத எம்ஜிஆர் படம் பாதியில் தன் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்த்தாராம்.
அதன்பின் நிகழ்ச்சிக்கு பிறகு பாண்டியராஜனை அழைத்து நான் உன்னை தவறாக எடைப் போட்டு விட்டேன். உன் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. நீ நல்ல கலைஞனாய் வருவாய் என ஆசி வழங்கினாராம். மேற்கொண்டு நான் எதிர்பார்த்ததை விட உன் நகைச்சுவை எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் உன்னை தவறாக நினைத்து விட்டேன் என்னை மன்னித்துவிடு எனவும் கூறினாராம் எம்ஜிஆர். இதைக் கேட்ட உடனே எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து விட்டாராம் பாண்டியராஜன்.
Also Read: அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் விஜய்யின் படம் கிடைக்கும்.. பகிரங்கமாக பேட்டியளித்த நடிகை