ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உயிரைக் காப்பாத்திக்க பொறம்போக்கு நிலத்தை தாரை வார்த்த எம்ஜிஆர்.. 40 ஏக்கரை வளைத்த ஜகஜால சகோதரிகள்

MGR: தமிழக அரசியல் மற்றும் சினிமா வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் அதில் எம்ஜிஆருக்கு மிகப்பெரும் இடம் இருக்கிறது. அவரை கொண்டாடாத மக்களே கிடையாது. ஆனால் அவரைப் பற்றிய சில சர்ச்சையான கருத்துக்களும் பரவியதுண்டு.

அதாவது அவர் தன்னுடைய அதிகாரத்தை எந்த அளவுக்கு பயன்படுத்துவார் என்று பல நாளிதழ்கள் வெளிப்படையாகவே செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன. அப்படி ஒரு சர்ச்சையான சம்பவத்தை பற்றி இங்கு காண்போம். இது எம்ஜிஆர் பற்றிய குறையாக கூட இருக்கலாம். ஆனாலும் உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்.

ஒருமுறை எம்ஜிஆருக்கு கிட்னி பிரச்சனை ஏற்பட்டிருந்தது. அதை குணப்படுத்துவதற்காக ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர் தான் கானு. ரொம்பவும் பிசியாக இருந்த அவரை வரவழைப்பதற்காக மூன்று மணி நேரம் ஒரு விமானம் தாமதப்படுத்தப்பட்டது.

Also read: எம்ஜிஆரை மிஞ்சிய நடிகையர் திலகம்.. சிங்கத்துக்கு நிகரான செல்லப்பிராணியை வளர்த்த பெருமை 

அப்படி ஸ்பெஷலாக வந்த டாக்டர் தன் சிகிச்சையால் எம்ஜிஆரை எழுந்து உட்கார வைத்து விட்டார். அதன் பிறகு அவர் மீண்டும் தன் நாட்டுக்கு திரும்ப நினைத்தபோது எம்ஜிஆர் தரப்பில் இருந்து அவரை இன்னும் சில நாட்கள் தங்கி இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் பிஸியான டாக்டரான அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அந்த காலகட்டத்தில் திரை உலகில் புகழின் உச்சியில் இருந்த சகோதரிகள் அவரை சிறப்பாக கவனித்திருக்கின்றனர். டாக்டரும் இங்கேயே தங்கி சிகிச்சை கொடுத்திருக்கிறார். அதற்காகத்தான் அந்த நடிகைகளுக்கு எம்.ஜி.ஆர் சட்டத்திற்கு புறம்பான புறம்போக்கு நிலமாக இருந்த 40 ஏக்கரை தாரை வார்த்து கொடுத்திருக்கிறார்.

இப்படி ஜலஜால வேலையை பார்த்த அந்த நடிகைகள் தங்களுக்கு கிடைத்த நிலத்தில் ஒரு பெரிய ஸ்டுடியோ கட்டினார்கள். காலப்போக்கில் அது பிளாட்டாக மாற்றம் பெற்று அதற்கு அந்த டாக்டரின் பெயரும் வைக்கப்பட்டது. இப்படி உயிரை காப்பாற்றிக் கொள்ள எம்ஜிஆர் செய்த ஒரு விஷயம் அப்போதைய பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையாக வலம் வந்தது.

Also read: சரோஜாதேவி போல வர ஆசைப்பட்ட நடிகை.. கடைசில பலான வழக்கு பாய்ந்ததுதான் மிச்சம்

Trending News