MGR: மக்கள் திலகம் எம்ஜிஆர் பல வெற்றி படங்களில் நடித்ததோடு தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவிஸ் மூலம் நிறைய படங்களை தயாரித்தும் இருக்கிறார். இதனால் எம்ஜிஆருக்கு லாபத்திற்கு மேல் லாபம் கிடைத்தும் இருக்கிறது. நிறைய படங்களில் நலிவடைந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார் இவர். அவருடைய தயாரிப்பில் வெளியான ஒரு படம் மிகப்பெரிய அளவில் சாதனை புரிந்து இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் தியேட்டர்களில் டிக்கெட்டின் விலை 150 லிருந்து 200 வரை விற்கப்படுகிறது. அதிலும் முதல் நாள், முதல் ஷோ என்றால் விலை ஆயிரத்தை தாண்டி விடுகிறது. ஆனால் 60களின் காலகட்டத்தில் டிக்கெட் விலை 30 பைசாவிலிருந்து 40 பைசா வரையில்தான் இருந்தது. அப்படிப்பட்ட சமயத்தில் எம்ஜிஆரின் இந்த படம் கோடி கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்திருப்பது என்பது தான் உண்மையிலேயே பெரிய விஷயம்.
Also Read:தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த 8 வேறு மாநில நடிகர்கள்.. உயர பறந்த எம்ஜிஆரின் கொடி
1969 ஆம் ஆண்டு எம்ஜிஆர் தயாரித்து, நடித்த திரைப்படம் தான் அடிமைப்பெண். இந்த படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதேபோன்று ஜெயலலிதாவும் இரட்டை வேடத்தில் நடித்ததோடு, தன்னுடைய சொந்த குரலில் பாடலும் பாடியிருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மிருகம் போல் வளர்க்கப்படும் ஒரு மனிதன் தன்னுடைய சுயத்தை புரிந்து கொண்டு பின்னர் வீரனாக மாறுவது தான் இந்த படத்தின் கதை.
இந்தப் படம் தான் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது. படத்தின் மொத்த வசூல் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ஆகும். அதாவது இன்றைய கால கணக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட 350 கோடிக்கு சமமாகும். இப்படி 70களின் காலகட்டத்தில் கோடிக்கணக்கான வசூலை பெற்ற அடிமைப்பெண் படத்தில் மொத்த பட்ஜெட் 50 லட்சம் தான்.
Also Read:தமிழ் சினிமாவை கெடுத்த எம்ஜிஆர்.. ஆரோக்கியம் இல்லாமல் இன்று வரை கஷ்டப்படும் சந்ததி
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் இந்த படம் இப்படி ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது. மேலும் அடிமைப்பெண் திரைப்படத்தின் கதை ஒரு இத்தாலி படத்தின் கதை தழுவல் என்று கூட சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வரும் தாய் இல்லாமல் நான் இல்லை என்னும் பாடல் டி எம் சௌந்தரராஜன் குரலில் பயங்கரமாக ஹிட் அடித்தது.
இப்போது தொழில்நுட்பங்கள் அதீத வளர்ச்சி அடைந்த காலம் என்பதால் ஒரு படத்தின் வசூல் என்பது ஒரு சில நாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது. தொழில்நுட்பங்கள் இல்லாத அந்த காலத்தில் இது போன்ற நிறைய படங்கள் பல சாதனைகளைப் படைத்து, வெளியில் தெரியாமலேயே இருக்கிறது.