எம்ஜிஆர் நடிப்பு, அரசியல் என இரண்டிலும் முத்திரை பதித்தவர். இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புரட்சிக் தலைவர் எம்ஜிஆர் உச்சத்தில் இருந்த போதும் மற்றவர்களின் கருத்துக்களை புரிந்து கொள்ளக் கூடியவர்.
அவ்வாறு புரட்சித்தலைவர் இடம் முதல்முறையாக கேள்வி கேட்டவர் தான் ரா சங்கரன். மௌனராகம் படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்திருப்பார். அதேபோல் பாரதிராஜாவின் புதுமைப்பெண் படத்திலும் ரேவதியின் தந்தையாக நடித்திருந்தார். இவர் இயக்குனர் கே சங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
அவ்வாறு ரா சங்கரன் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த படத்தில் முதல் முறையாக எம்ஜிஆரை சந்தித்துள்ளார். அந்தப் படத்தில் போஸ்ட்மேனாக எம்ஜிஆர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் முதல் காட்சி தனக்கு திருப்தியாக இல்லை மீண்டும் ஒன்ஸ்மோர் போகலாமா என சங்கரன் கேட்டுள்ளார்.
எம்ஜிஆரை இதற்கு முன்னதாக இது போன்று யாரும் கேட்டதில்லை. முதல் முறையாக சங்கரன் ஒன்ஸ்மோர் கேட்டதால் மொத்த படக்குழுவும் ஆடிப்போனது. அப்படத்தின் இயக்குனர் கே சங்கரன் முதல் அனைவரும் யாரிடம் ஒன்ஸ்மோர் கேட்பது என்று தெரியாதா என திட்டி உள்ளனர்.
அனைவரும் இவர் மீது கோபமாக இருந்துள்ளனர். ஆனால் எம்ஜிஆர் எத்தனை டேக் வேணாலும் எடுத்துக்கொள்ளுங்கள் நான் நடித்து தருகிறேன் என கூறினாராம். அதன்பின்பு அந்த காட்சி மீண்டும் எடுக்கப்பட்டதாம். எம்ஜிஆர் அவ்வளவு நல்ல மனிதர் என்றும், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என ரா சங்கரன் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.