வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினிக்கு நன்மை செய்த எம்.ஜி்.ஆர்.. மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் நடிக்க வந்த காலகட்டத்தில், ரஜினிகாந்தை சினிமாவில் நடிக்க வைக்கக்கூடாது என்று பல எதிர்ப்புகளை எம்.ஜி.ஆர் செய்தார் என்றெல்லாம் பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் ஒரு பைத்தியம் என எம்ஜிஆர் கூறியதாகவும், எம்ஜிஆருக்கு ரஜினிகாந்தை பிடிக்காது என்றெல்லாம் பல விஷயங்கள் அன்றைய கால பத்திரிக்கைகளில் கொளுத்தி போடுவார்கள்.

ஆனால் எம்ஜிஆர் அவர்கள், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரஜினிகாந்திற்கு உதவிய பல விஷயங்கள் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது. எம்.ஜி.ஆர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிய நிலையில்,ரஜினிகாந்த்திற்காக எம்.ஜி.ஆர் செய்த பல மறைமுக உதவிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read : அக்கட தேசம் வாரி வழங்கிய 5 பொக்கிஷமான நடிகர்கள்.. யாரும் அசைக்க முடியாத இடத்தில் சூப்பர் ஸ்டார்

1978 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அப்போது எம்.ஜி.ஆர் வாரம் இருமுறை ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் குறித்து அதிகமாக விசாரிப்பாராம். அதுமட்டுமில்லாமல் உடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அது தான் நமக்கு மிகவும் முக்கியம் என அறிவுரையும் வழங்குவாராம்.

மேலும் ரஜினிகாந்திடம் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள், திருமணம் தான் நம் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும் என்று எம்.ஜி.ஆ,ர் ரஜினியிடம் திருமணம் குறித்து பேசுவாராம். அந்த சமயத்தில் லதாவை விரும்பிய ரஜினிகாந்த், லதாவின் வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருந்தனராம்..

Also Read : அசால்டாக ஒரு கோடி கொடுத்த கமல்.. காசு இல்ல உழைப்பை தரேன் என ஒதுங்கிய ரஜினி

இதனை அறிந்துகொண்ட எம்.ஜி.ஆர் உடனே களத்தில் இறங்கி ரஜினிகாந்த், லதாவிற்கு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தாராம். அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தை கட்டிக்கொண்டிருந்த சமயத்தில் மண்டபத்தை கட்டக்கூடாது என்பதற்காக பலரும் நெருக்கடி செய்தனராம்.

இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எம்.ஜி.ஆர், ராகவேந்திரா திருமண மண்டபத்தை கட்டிமுடிக்க பக்கபலமாக செயல்பட்டு ரஜினிகாந்த்திருக்கு உதவி செய்தாராம். எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்தபோது பல மக்களுக்கு உதவி செய்த நிலையில்,ஒரு நடிகனாக இருந்த ரஜினிகாந்த் இருக்கும் மறைமுகமாக பல உதவிகளை செய்துள்ளார் என்பது நெகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Also Read : ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த ஆணையம்.. தெளிவாக தெரியாமல் சூப்பர் ஸ்டார் பேசிய பேச்சு

Trending News