வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாய்ப்புக்காக பொய் சொன்ன எம்ஜிஆர்.. சட்டையை பிடித்து சண்டை போட்ட இயக்குனர்

அரசியலில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு ஜாம்பவான்கள் தான் தமிழ் சினிமாவையே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். இப்போதைய தலைமுறை கூட அவர்களுடைய பெருமையையும், புகழையும் பற்றி பேச தவறுவதில்லை.

அந்த அளவுக்கு பேரும் புகழும் பெற்ற இந்த இருவரும் ஆரம்ப காலத்தில் ரொம்பவும் சிரமப்பட்டு தான் சினிமாவுக்குள் வந்தனர். அதிலும் எம்ஜிஆர் தன்னுடைய முதல் படத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த எம்ஜிஆருக்கு சதிலீலாவதி என்ற திரைப்படம் தான் அறிமுக திரைப்படமாக அமைந்தது.

Also read : டி ராஜேந்தரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய எம்ஜிஆர்.. கூடுவிட்டு கூடு பாய்ந்த ரகசியம்

அந்தப் படத்தில் எம் ஜி ஆர் போலீஸாக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் இயக்குனர் அவருக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா என்று கேட்டிருக்கிறார். தெரியாது என்று சொன்னால் எங்கே வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற பயத்தில் எம்ஜிஆர் எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் என்று பொய் சொல்லி இருக்கிறார். அப்போது உண்மையில் எம்ஜிஆருக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாதாம்.

அதன் பிறகு இயக்குனரும் அந்த சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சைக்கிள்களில் ஏதாவது ஒன்றை எடுத்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆரும் அங்கு நின்று கொண்டிருந்த புது சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். மேலும் அவர் அங்கிருந்த உதவியாளர் ஒருவரிடம் எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது. நான் ஏறி உட்கார்ந்ததும் நீங்கள் தள்ளி விடுங்கள். நான் எப்படியாவது அந்த காட்சியை ஓகே செய்து விடுகிறேன் என்று கேட்டிருக்கிறார்.

Also read : திமிரை விட்டுக் கொடுக்காமல் உச்சாணி கொம்பிலே நின்ற நடிகர்.. இறங்கி வந்த எம்ஜிஆர், சிவாஜி

அதன் பிறகு காட்சி படமாக்கப்பட்டதும் எம்ஜிஆர் சைக்கிளை எப்படியோ ஓட்டி இருக்கிறார். ஆனால் அதை நிறுத்த தெரியாததால் சைக்கிளை ஓர் இடத்தில் மோதி கீழே போட்டு இருக்கிறார். ஆழ்வார்பேட்டையில் இருந்த ஒரு ஸ்டூடியோவில் தான் இந்த படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அப்போது அங்கு இருந்த பிரபல இயக்குனர் கிருஷ்ணன் சைக்கிள் சேதமடைந்ததை பார்த்துவிட்டு எம்ஜிஆரின் சட்டையை பிடித்து கோபமாக பேசி இருக்கிறார். உடனே எம்ஜிஆர் எனக்கு இதுதான் முதல் படம், தெரியாமல் நடந்து விட்டது, காட்சி முடியும் வரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இதனால் கோபம் குறைந்த கிருஷ்ணன் எம்ஜிஆரை காட்டிக் கொடுக்காமல் சென்றுள்ளார். அதன் பிறகு காட்சி எப்படியோ நல்லபடியாக முடிந்திருக்கிறது. இருப்பினும் எம்ஜிஆர் மீண்டும் கிருஷ்ணனிடம் வந்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Also read : சக்சஸ் மீட் கொண்டாடிய முதல் தமிழ் படம்.. 60களிலேயே ஆரம்பித்து வைத்த எம்ஜிஆர்

Trending News