வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எம்ஜிஆரின் கல்லாபெட்டிய நிரப்பிய 5 படங்கள்.. சிவாஜியிடம் இருந்து திரும்பி ஓடி வந்த தயாரிப்பாளர்கள்

தென்னிந்திய சினிமாவில் 60, 70களில் கொடி கட்டி பறந்த மாஸ் ஹீரோக்களாக இருந்த எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இடையே கடும் போட்டி நிலவியது. அதிலும் தொடர்ந்து 5 படங்களில் கல்லா கட்டிய எம்ஜிஆர், சிவாஜியை நாடி சென்ற தயாரிப்பாளர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

அன்பே வா: 1966 ஆம் ஆண்டு இயக்குனர் ஏசி திரலோகசந்தர் இயக்கத்தில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் காமெடி கலந்த காதல் திரைப்படம். இதில் எம்ஜிஆர் உடன் சரோஜாதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் காமெடி நடிகரான நாகேஷ் அவர்களின் நடிப்பானது அல்டிமேட் ஆக இருக்கும். அதிலும் ஏவிஎம் நிறுவனம் எம்ஜிஆரை வைத்து தயாரித்த ஒரே திரைப்படமும் இதுவே ஆகும்.

இதில் எம்ஜிஆர், ஜேபி என்ற பாலு கதாபாத்திரத்திலும் சரோஜாதேவி கீதா என்ற கதாபாத்திரத்திலும் நாகேஷ் ராமையா என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து தனது நடிப்பு திறமையை அசத்தியிருப்பார்கள். அதிலும் இந்த படத்தில் வரும் ”ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்ற பாடல் ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் ஒன்றாக உள்ளது. எம்ஜிஆர், சரோஜாதேவி நடிப்பில் வெளியான அன்பே வா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: சிவாஜியை பட்டை தீட்டிய எம் ஆர் ராதா.. நடிகவேல்-லை பார்த்து மிரண்ட நடிகர் திலகம்

எங்க வீட்டுப் பிள்ளை: 1965 ஆம் ஆண்டு இயக்குனர் சாணக்யா இயக்கத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படம் ஆகும். இதில் எம்ஜிஆர் உடன் நம்பியார், சரோஜாதேவி, தங்கவேலு, நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகிய அதிலும் “நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. வசூல் ரீதியாகவும் இந்த படம் கல்லா கட்டியது.

நாளை நமதே: 1975 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் எம் ஜி ஆர் உடன் லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம் ஜி ஆர் சங்கர் மற்றும் விஜய் என்னும் இரட்டை வேடங்களை ஏற்று மிக சிறப்பாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். படத்தில் சங்கர் மற்றும் விஜயகுமார் தனது பெற்றோரின் மரணத்திற்கு கொலையாளியான ரஞ்சித்தை பழி வாங்குவது போல் இக்கதையானது அமைந்துள்ளது.

Also Read: சிவாஜி, எம்ஜிஆர் வாங்கிய அதிகபட்ச சம்பளம்.. படையப்பாகாக ரஜினி கொடுக்க சொன்ன சம்பளம்

அடிமைப் பெண்: 1969 ஆம் ஆண்டு இயக்குனர் கே ஷங்கர் இயக்கத்தில் நடிகர் எம் ஜி ராமச்சந்திரன் தானே தயாரித்த நடித்த திரைப்படம் ஆகும். இதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என இருவருமே இரட்டை வேடங்களில் நடித்து உள்ளனர். படத்தில் எம் ஜி ஆர் வேங்கையன் என்னும் கதாபாத்திரத்திலும் ஜெயலலிதா வேங்கைமலை ராணியாகவும் ஜீவா என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அதிலும் ஜெயதலிதா தனது சொந்த குரலில் பாடலை பாடியும் இருக்கிறார். இப்படம் 230 லட்சம் ரூபாய் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. .

ஆயிரத்தில் ஒருவன்: 1965 ஆம் ஆண்டு இயக்குனர் பி ஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான ஒரு காவிய திரைப்படம் ஆகும். இதில் எம் ஜி ராமச்சந்திரனுடன் ஜெயலலிதா, நம்பியார், ஆர் எஸ் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் மக்களை சொந்த நாட்டிலிருந்து அடிமைகளாக மற்றொரு நாடுகளுக்கு நாடு கடத்துகின்றன. அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு வருகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு படமானது அமைந்துள்ளது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியன.

Also Read: சிவாஜி தான் வேண்டும் என அடம் பிடித்த நடிகர்கள்.. தன் பாணியிலேயே நடிகர் திலகம் அசத்திய 5 படங்கள்

இவ்வாறு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதோடு வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதிலிருந்து எம்ஜிஆரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் லாபம் மட்டுமே அடைந்தார்கள் என்பதை தாண்டி நட்டம் அடையவில்லை என்று உணர்த்து, சிவாஜியை நோக்கி சென்ற பல தயாரிப்பாளர்களும் இவரிடம் திரும்பி வந்தனர். அதிலும் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அடிமைப்பெண் என்னும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் 230 லட்சம் ரூபாய் வசூலித்து பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது.

Trending News