திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கிளாமரான பாடலுக்கு பிள்ளையார் சுழி போட்ட எம்ஜிஆரின் 5 படங்கள்.. பட்டையை கிளப்பிய உலகம் சுற்றும் வாலிபன்

சினிமா துறையில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி படிப்படியாக முன்னேறி கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவர் தனது 50 வது வயதிற்குப் பிறகே திரைத்துறையில் புகழின் உச்சிக்கே சென்றார். அதிலும் மக்களுடைய பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார். படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு நடிகைகள் போட்டி போட்டு நடித்தனர். அதுவும் இவருடன் நடித்த நடிகைகளுடன் படத்தில் வரும் பாடல்களில் மிகவும் கிளாமராக நெருக்கம் காட்டி நடித்திருப்பார். அப்படி கிளாமரான பாடலுக்கு பிள்ளையார் சுழி போட்ட எம்ஜிஆரின் நடிப்பில் வெளிவந்த 5  படங்களை இங்கு காணலாம்.

நினைத்ததை முடிப்பவன்: இயக்குனர் பி நீலகண்டன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நினைத்ததை முடிப்பவன். இப்படத்தில் எம்ஜிஆர் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இதில் எம்ஜிஆர் உடன் மஞ்சுளா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதிலும் “கண்ணை நம்பாதே” என்னும் பாடலில் இவர்கள் இருவரும் மிக கவர்ச்சியாக நடித்துள்ளனர்.

Also Read: அவதூறு பேச்சால் நடிகையை துரத்திவிட்ட பிரபலங்கள்.. தூக்கி விட்டு அழகு பார்த்த எம்.ஜி ஆர்

நாளை நமதே: இயக்குனர் கே எஸ் சேது மாதவன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நாளை நமதே. இதில் எம்ஜிஆர் உடன் லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வரும் “என்னை விட்டால் யாரும் இல்லை” என்ற பாடலில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர்.

இதயக்கனி: 1975 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஜெகநாதன் இயக்கத்தில் எம் ஜிஆர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இதயக்கனி. இதில் எம் ஜி ஆர் உடன் ராதாசலுஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் வரும் “தொட்ட இடமெல்லாம்”என்னும் கவர்ச்சி பாடலில் கண் கூசும் அளவிற்கு நடித்துள்ளனர்.

Also Read: 3 படங்களை இயக்கிய எம்.ஜி.ஆர். 200 நாட்களை கடந்த உலகம் சுற்றும் வாலிபன்

ராமன் தேடிய சீதை: இயக்குனர் பி நீலகண்டன் இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராமன் தேடிய சீதை. இப்படத்தில் எம்ஜிஆர்-க்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்துள்ளார். படத்தில் வரும் “என் உள்ளம் உந்தன் ஆராதனை” என்னும் பாடலில் கிளாமரில் அசத்தியுள்ளனர்.

உலகம் சுற்றும் வாலிபன்: 1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் தான் உலகம் சுற்றும் வாலிபன். இதில் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் எம்ஜிஆர் உடன் மஞ்சுளா, லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில்  இடம் பெற்றுள்ள “தங்கத் தோணியிலே” என்னும் பாடலில் மிகவும் நெருக்கம் காட்டி நடித்துள்ளனர்.

Also Read: எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்பே சினிமாவை ஆட்சி செய்த 2 ஜாம்பவான்கள்.. 70-களில் கலக்கிய சூப்பர் ஹீரோஸ்

Trending News