சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ரஜினியின் சினிமா வாழ்க்கையை மாற்றிய 5 சினிமா நிறுவனங்கள்.. எம்ஜிஆரின் அரசியல் பிரவேசத்தால் நடந்த அதிசயம்

72 வயதிலும் ஒரு நடிகர் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ரஜினியின் சினிமா வாழ்க்கை 1975 ஆம் ஆண்டு ஆரம்பித்தாலும் 1978 ல் தான் அவருடைய சினிமா வாழ்க்கை வெளிச்சத்தை அடைந்தது. எம்ஜிஆரின் அரசியல் ரஜினியின் சினிமா வாழ்க்கைக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் நம்ப முடிகிறதா.

மக்கள் திலகம் எம் ஜி ஆர் அரசியில் வாழ்க்கைக்குள் முழு நேர கவனம் செலுத்தியதால், எம் ஜி ஆருக்காக எழுதப்பட்ட கதையில் ரஜினி நடிக்க ஆரம்பித்தார். இதனாலாயே ரஜினி கோலிவுட்டில் எம் ஜி ஆருக்கு அடுத்து பார்க்கப்பட்டார். மேலும் முக்கியமான 7 சினிமா நிறுவனங்கள் ரஜினியின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றின.

Also Read: பாலச்சந்தருக்கு இணையாக ரஜினியை வளர்த்து விட்ட பிரபலம்.. மறைமுகமாக சூப்பர் ஸ்டார் செய்த காரியம்

தேவர் ஃபிலிம்ஸ்: முதன் முதலாக ரஜினியை வைத்து படம் எடுத்த பெரிய பேனர் நிறுவனம் தேவர் ஃபிலிம்ஸ்
தான். ரஜினி இந்த தயாரிப்பில் நடித்த தாய் மீது சத்தியம் எம் ஜி ஆருக்காக எழுதப்பட்ட கதை. அன்னை ஓர் ஆலயம், நான் போட்ட சவால், அன்புக்கு நான் அடிமை போன்ற ரஜினியும், தேவர் ஃபிலிம்ஸ்ஸும் ஒன்றாக பணிபுரிந்தனர்.

சுஜாதா சினி ஆர்ட்ஸ்: சிவாஜி கணேசனை மட்டுமே வைத்து படம் எடுத்த சுஜாதா சினி ஆர்ட்ஸ் ரஜினியுடன் படம் பண்ணியது ரஜினிக்கு அப்போது ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. இந்த நிறுவனத்தின் கீழ் ரஜினி நடித்த பில்லா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த நிறுவனம் மறைந்த நடிகர் பாலாஜியுடையது. இவர் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு உறவினராவர்.

ஏவிஎம் நிறுவனம்: ரஜினி அடுத்து நடித்த மிகப்பெரிய பேனர் ஏவிஎம் நிறுவனம். ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த முரட்டுக்காளை ரஜினியின் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் ஆகும் . அதன் பின்னர் பந்தம், பாயும்புலி, போக்கிரி ராஜா, மனிதன், ராஜாசின்னரோஜா, எஜமான், சிவாஜி போன்ற படங்களை ஏவிஎம் தயாரித்தது.

Also Read: ரஜினிக்கு வந்த கூட்டத்தில் 50% கூட கே.ஜி.எஃப், பாகுபலிக்கு வரல.. என்ன படம் தெரியுமா?

சத்யா மூவிஸ்: 1980 களில் சறுக்கலை சந்தித்த ரஜினியை மீண்டும் தூக்கிவிட்டது சத்யா மூவிஸ். எம் ஜி ஆரை மட்டுமே வைத்து திரைப்படங்களை எடுத்த சத்யா மூவிஸ் ரஜினியுடன் இணைந்து ராணுவ வீரன், மாப்பிள்ளை படங்களை தயாரித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய மைல்கல்லான பாட்ஷா திரைப்படத்தை சத்யா மூவிஸ் தான் தயாரித்தது.

சிவாஜி புரொடக்சன்ஸ்: நடிகர் சிவாஜி கணேசனின் சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் 1992 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து மன்னன் திரைப்படத்தை கொடுத்தது. இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. பாபா திரைப்படம் படு தோல்வி அடைந்த பிறகு சினிமாவை விட்டு விலக நினைத்த ரஜினியை மீண்டும் சந்திரமுகி என்னும் மெகா ஹிட் படத்தோடு சினிமாவிற்கு கொண்டு வந்தது.

Also Read: 70, 80களில் ஹீரோ, வில்லன் இரண்டிலும் பேர் வாங்கிய நடிகர்.. கமல், ரஜினிக்காக செய்த தியாகம்

- Advertisement -spot_img

Trending News