புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய் மாமா செய்த பித்தலாட்டம்.. ஈகோவால் கேரியரை தொலைத்த மைக் மோகன்

வெள்ளி விழா நாயகன் மோகன் அப்போதைய காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற உச்ச நடிகர்களின் படங்களுக்கு இணையாக இவரது படங்களும் ஓடியது. மேலும் இவருடைய பெரும்பான்மையான படங்கள் 200 நாட்களைத் தாண்டி ஓடியிருக்கிறது.

இதனால் மோகனுக்கு வெள்ளிவிழா நாயகன் என்ற பெயர் கிடைத்தது. மேலும் மோகனின் மற்றொரு பெயர் மைக் மோகன். ஏனென்றால் இவர் நடித்த படங்களில் அதிகம் பாடகராக நடித்துள்ளார். அதிலும் தனக்கென தனி ஸ்டைலுடன் அவரின் பாவனைகள் இருப்பதால் ரசிகர்களால் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார்.

Also Read :வெள்ளி விழா கண்ட மோகனின் 12 படங்கள்.. அந்தக் காலத்திலேயே ரஜினி, கமலை ஓரங்கட்டிய மனுஷன்

மேலும் கன்னட மொழியில் மோகனின் குரலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருந்தது. அப்போது மோகன் நடித்த படங்களில் எஸ்என் சுரேந்தர் தான் அவருக்கு குரல் கொடுத்திருப்பார். தளபதி விஜய்யின் அம்மா ஷோபாவின் கூடப்பிறந்த தம்பி தான் சுரேந்தர்.

மோகன் மற்றும் சுரேந்தர் காம்போவில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வண்டிக்கு இரண்டு சக்கரம் போல இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்தால் அது சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

Also Read :அந்நியன் பட சாதனையை முறியடித்த விஜய்.. 275 நாட்கள் ஓடிய திரைப்படம்

ஆனால் சுரேந்தர் தன்னுடைய குரலால் தான் மைக் மோகன் படங்கள் வெற்றி பெறுவதாக கூறி பிரச்சினையை செய்துள்ளார். அதன்பின்பு இது பெரிய சண்டையாக வெடித்துள்ளது. இதைத்தொடர்ந்து மோகன், சுரேந்தர் இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் மோகன் தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசி படத்தில் நடித்தார்.

ஆனால் அந்த படங்கள் தோல்வியை சந்தித்தது. இந்தச் சரிவிற்கு மோகனின் குரலும் ஒரு காரணம் என கூறுகின்றனர். மேலும் மோகனின் படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் சினிமாவை விட்டு விலகி விட்டார். ஆனால் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மைக் மோகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also Read :12 நாளில் உருவான மோகன் படம்.. உச்சகட்ட பயத்தை ஏற்படுத்திய சூப்பர் ஹிட்

Trending News