ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கேவலமான மனநிலையைக் கொண்ட மைக் டைசன்.. ஒரு மனுஷன் இத்தனை தப்புமா பண்றது

குத்துச்சண்டை உலகத்தில் மட்டுமல்லாமல் சாமானிய மனிதனுக்கும் நன்றாக தெரிந்த பெயர் மைக் டைசன். பலமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர், பெரும் பணம் சம்பாதித்தவர், மேலும் இவர் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக் டைசன் எந்த அளவுக்கு புகழ் பெற்றவரோ அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். கற்பழிப்பு, அதனால் கைது, ஹோலிபில்டின் காதை கடித்தது, போதை பொருள் உபயோகம் என்று அனைத்து சர்சகளிலும் இறங்கி அடித்தவர்.

குத்துச்சண்டை உலகில் அசைக்க முடியாத மன்னனாக இருந்த டைசன், தனது மனைவி தொடுக்க இருந்த விவகாரத்தில் இருந்து ஆக்ரோஷமாக மாறினார். அதன் பின்னர் யாரும் எதிர்பாரா வண்ணம் 1990ம் ஆண்டு ஜப்பானில் நடந்த போட்டியில் டக்ளஸிலிடம் வீழ்ந்தார்.

1991ம் வருடம் 18 வயது பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்காக 6 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவர் 1995ஆம் ஆண்டிலேயே வெளியில் வந்தார். வெளியில் வந்த பிறகும் அவர் சில போட்டிகளை எளிதில் வென்றார்.

மீண்டும் பழைய டைசனை காணலாம் என்று காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 1997ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சக போட்டியாளர் ஹோலி பீல்டின் காதை கடித்து சர்ச்சயில் சிக்கினார். பின்னர் படிப்படியாக அவர் புகழ் குறைய ஆரம்பித்தது.

2007ஆம் ஆண்டு கொகைன் பயன்படுத்திய குற்றத்திற்காக 24மணிநேரம் ஜெயில் தண்டனை அனுபவித்து வெளியில் வந்தார். தொலைக்காட்சிகளில் அதிகம் பங்கு பெற்ற அவர், 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஹங்கோவர் திரைபடத்தில் மைக் டைசன் ஆகவே நடித்தார்.

அமெரிக்க ஊடகத்திற்கு அவர் கொடுத்த பேட்டியில் ‘ எனது வாழ்க்கை வேஸ்ட்.. நான் வாழ்கையில் தோற்றவன் ‘ என்று குறிப்பிட்டு இருந்தார். புகழின் உச்சியில் இருந்த டைசன் ஒழுக்கமற்ற நடத்தையாலும், அளவற்ற கோபத்தாலும் வீழ்ந்தார். தற்போது விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.

Trending News