திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எனக்கு இதுமாதிரி நடிக்க பிடிக்காது.. இயக்குனர்களுக்காக ‘மிர்ச்சி’ சிவா நடித்த படங்கள்

ஒரு ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தான் சிவா. அதன் பின்னர் தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், விளம்பரங்களிலும் கூட இவர் நடித்துக் கொண்டிருந்தார். ஷாம் நடித்த 12B திரைப்படத்தில் கூட இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இன்று தமிழ் சினிமா ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த சென்னை 28 திரைப்படம் தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதன் பின்னர் சரோஜா, வா குவாட்டர் கட்டிங் போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும் சிவாவை தமிழ் சினிமா ரசிகர்களிடையே நெருக்கமாக கொண்டு சென்ற படம் தமிழ் படம் தான். அதுவரை வந்த அத்தனை படங்களையும் ட்ரோல் செய்யும் விதமாக வெளியான இந்த படத்தில் சிவா தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read:யாரா இருந்தா எனக்கென்ன.. மிர்ச்சி சிவா படத்தை குப்பையில் போட்ட பிரபல தயாரிப்பாளர்

அதன் பின்னர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிவா நடித்த கலகலப்பு திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சிவாவின் பேச்சு மற்றும் நடிப்பு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அவரால் இன்று வரை முன்னணி ஹீரோவாக வர முடியவில்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும் சிவா தொடர்ந்து வெற்றிக்காக முயற்சி செய்து வருகிறார்.

சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் தனக்கு பிடிக்காவிட்டாலும் இயக்குனர்களுக்காக அவர் நடித்த படங்களை பற்றி பேசி இருக்கிறார். அதாவது சிவாவுக்கு மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க பிடிக்காதாம். ஆனால் சென்னை 28 மற்றும் கலகலப்பு போன்ற படங்கள் அப்படி கதை அமைப்பில் இருந்தாலும் இயக்குனர்களின் மேலிருந்த நம்பிக்கையால் தான் அந்த படங்களில் நடித்தாராம்.

Also Read:ஆளவந்தான் படத்தில் மிர்ச்சி சிவாவை நோட் பண்ணீங்களா.? கோட் சூட்டுடன் வைரலாகும் புகைப்படம்

மேலும் சென்னை 28 மற்றும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகங்களில் இவர் நடித்தே ஆக வேண்டும் என்பதால்தான் நடித்தாராம். ஆனால் சிவா சொன்ன இந்த இரண்டு படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சுந்தர் சி மற்றும் வெங்கட் பிரபு இருவருமே மல்டி ஸ்டார்ட்ஸ்களை வைத்து படம் எடுத்தாலும் அவர்களுக்கான சரியான காட்சிகளை கொடுப்பார்கள் என்று சிவா சொல்லி இருக்கிறார்.

சிவா ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக இருந்தாலும் இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இவரின் முந்தைய படங்களில் தொடர்ந்து நடித்த கதாபாத்திரங்களின் மூலம் இவருக்கு சீரியஸ் கதைகள் செட்டாகாது என்று ரசிகர்களே முடிவு செய்து விட்டார்கள். இதுவும் சிவாவின் தோல்விக்கு ஒரு காரணம்.

Also Read:2 வருடமாக பொட்டியில் கிடக்கும் சிவா படம் OTT ரிலீஸ்.. ட்ரெய்லர் வந்தப்பவே படம் வந்திருந்தா மாஸ் ஹிட் ஆகியிருக்கும்!

Trending News