செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

காணாமல் போன விஷால் பட நடிகை.. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால் ஏற்பட்ட பரபரப்பு

விஷால் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் இவருடன் இணைந்து லத்தி படத்தில் நடித்திருந்த நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக வெளிவந்த தகவல் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ரெஜினா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த சூழலில் இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு தன் தோழியுடன் வந்திருக்கிறார்.

Also read: ஆண்டவன் மேல பாரத்தை போட்டு மாஸ் நடிகரை நம்பும் விஷால்.. வாழ்வா சாவா போராட்டத்தில் வெளிவரும் படம்

இது குறித்து தன் சோசியல் மீடியா பக்கத்திலும் அவர் பதிவிட்டு இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கிறது. சுனைனா கடத்தப்பட்டாரா என்ற கேள்வியுடன் ரெஜினா பட தயாரிப்பு தரப்பு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை மிக வேகமாக சோசியல் மீடியாவில் வைரல் செய்து வந்தனர். அது மட்டுமின்றி சுனைனாவுக்கு என்ன ஆனது என்ற கேள்விகளும் எழ தொடங்கியது. இதை அடுத்து காவல்துறையினர் அவர் எங்கிருக்கிறார் என்ற தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து சென்னையின் பல முக்கிய பகுதிகளிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

Also read: சூப்பர் ஹிட் கொடுத்தும் கெரகம் யாரை விட்டுச்சு.. விஷ்ணு விஷாலுக்கு ஆரம்பித்த ஏழரை

இது ஒரு புறம் இருக்க ரசிகர்களும் இந்த விஷயத்தை பரபரப்பாக்கினார்கள். இது குறித்த ஹேஷ் டேக்குகளும் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது. ஆனால் இறுதியில் இது பட ப்ரொமோஷனுக்காக என்ற விஷயம் தெரிய வந்ததால் போலீசார் அதிருப்தி அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தயாரிப்பு தரப்புக்கு அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாகவே படங்களை ரசிகர்கள் முன் கொண்டு சேர்க்க பட குழுவினர் ஏதாவது வித்தியாசமான ப்ரமோஷனை செய்து வருவது வழக்கமாகிவிட்டது. அதில் ரெஜினா பட டீம் செய்தது கொஞ்சம் ஓவராகிவிட்டது. இதை பார்க்க பலரும் இவ்வளவு கேவலமான ப்ரமோஷன் தேவையா என திட்டி தீர்த்து வருகின்றனர்.

Also read: இங்க பருப்பு வேகல, அக்கட தேசத்து அரசியலுக்கு அடி போடும் விஷால்.. கைநழுவி போன கனவு நடக்குமா?

Trending News