ஆனந்தியின் கர்ப்பத்தை அறிந்த வில்லி.. பதற வைக்கும் சிங்கபெண்ணே

Serial : சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே தொடர் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார்.

தற்போது தன்னை மறந்து நடந்து வரும்போது சாக்கடையில் விழுந்து விடுகிறார். அந்த வழியாக வந்த மகேஷ் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கிறார். பிறகு ஹாஸ்டலில் ஆனந்தியை விட்டுவிட்டு அன்புக்கு போன் செய்கிறார்.

அன்புவை நேரில் வர வைத்த மகேஷ் ஆனந்திக்கு உள்ள பிரச்சனையை சொல்லி எச்சரித்து விட்டு செல்கிறார். அன்பும் தனது அம்மா மற்றும் தங்கையிடம் ஆனந்தி நிலைமையை சொல்லி வருத்தத்தில் இருக்கிறார்.

சிங்கப் பெண்ணே தொடரில் உண்மையை அறிந்த மித்ரா

அதோடு ஆனந்தியுடன் பேச வேண்டும் என்றும் தவித்துக் கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் தனது அம்மா, அப்பாவின் முகத்தை எப்படி நான் பார்ப்பேன் என்று ஆனந்தி அச்சத்தில் இருக்கிறார். மேலும் தன்னுடைய ஸ்கேன் ரிப்போர்ட்டை கிழித்து குப்பை தொட்டியில் போடுகிறார்.

அதை மித்ரா ஒன்று சேர்த்து பார்க்கும் போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வருகிறது. இதனால் அதிர்ந்து போகிறார் மித்ரா. ஏனென்றால் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம் மகேஷ் தான் என்பது இப்போது மித்ராவுக்கு தெரிய வர இருக்கிறது.

ஆகையால் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் மகேஷ், ஆனந்தி இருவருக்கும் திருமணம் நடந்திடும் என்று கமுக்கமாக மறைக்க உள்ளார். மேலும் திட்டம் போட்டு அன்பு மற்றும் ஆனந்தி திருமணத்தை நடத்தி வைக்கும் முயற்சியில் இறங்க உள்ளார்.

இவ்வாறு எதிர்பார்க்காத திருப்பங்களுடன் சிங்க பெண்ணே தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த வார டிஆர்பியிலும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

Leave a Comment