ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஆனந்தியை நெருங்க நினைக்கும் அன்பு, சகுனி வேலை பார்க்கும் மகேஷ்.. இனிதான் மித்ராவின் ஆட்டமே ஆரம்பம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் கடந்த வார தொடக்கம் நந்தா கொலை கேசு உடன் சுவாரசியமாக ஆரம்பித்தது. ஆனால் மீண்டும் பழைய குருடி கதவ தொறடி என்ற கதையாக ஆகிவிட்டது. வழக்கம் போல ஆனந்தி அழகன் யார் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

இன்னொரு பக்கம் அன்பு சீக்கிரமாக நான் தான் அழகன் என்று சொல்லி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என மனதிற்குள்ளேயே ஒரு திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான். எது எப்படி போனால் என்ன ஆனந்தி எனக்குத்தான் என்று மனக்கணக்கு போட்டுக் கொண்டு மகேஷ் ஒரு பக்கம் இருக்கிறான்.

இனிதான் மித்ராவின் ஆட்டமே ஆரம்பம்

இதெல்லாம் போதாத குறைக்கு மித்ரா ஒரு வில்லி நாடகத்தில் இருந்தாங்களே அவங்க எங்க என்று தேடும் அளவுக்கு அந்த கேரக்டர் ஆகிவிட்டது. நந்தாவை மித்ரா மற்றும் கருணாகரன் வேலைக்கு சேர்த்ததால் இரண்டு பேருக்கும் மகேஷ் பயங்கரமாக டோஸ் விட்டான்.

அதுமட்டுமில்லாமல் இனி கம்பெனியில் யாரை வேலைக்கு சேர்க்க வேண்டும், யாரை வெளியே அனுப்ப வேண்டும், போன்றவற்றை அன்பு தான் தீர்மானிக்க வேண்டும் என மகேஷ் சொல்லிவிட்டான். இதனால் கருணாகரனுக்கு அன்பு மேல் பொறாமை ஏற்படுகிறது.

இன்னொரு பக்கம் ஆனந்தியை அந்த ஹாஸ்டலில் இருந்து மாற்றுவதற்கு மகேஷ் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான். இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என மித்ரா இதற்கு ஒரு முடிவு கட்ட யோசித்துக் கொண்டிருக்கிறாள். மீண்டும் மித்ரா வேறு ஏதாவது பிளான் உடன் ட்விஸ்ட் வைத்தால் தான் சுவாரஸ்யம் ஏற்படும்.

சிங்கப்பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News