சிங்கப்பெண்ணில் சாட்சியாக மாறும் மித்ராவின் அம்மா.. முடிவுக்கு வரும் ஆனந்தியின் கர்ப்பம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மித்ராவின் அம்மா மகேஷ் மற்றும் மித்ராவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த கையோடு ஆனந்தியை நேரில் பார்க்க ஹாஸ்டலுக்கு வருகிறார்.

மித்ராவின் அம்மா சத்தியவாதியை திடீரென ஆனந்தியை சந்திக்க வைத்தது நேயர்களுக்கு பெரிய குழப்பத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் கம்பெனி பார்ட்டி நடந்த அன்று ஒளிபரப்பப்பட்ட எபிசோடை கவனித்தால் சத்தியவதி எதனால் திடீரென உள்ளே வந்திருக்கிறார் என தெரியும்.

சாட்சியாக மாறும் மித்ராவின் அம்மா

அந்த பார்ட்டி முழுவதும் மித்ரா எங்கே போகிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை நோட்டமிட்டதே சத்தியவதி தான். அதனால் கண்டிப்பாக ஆனந்தியின் விஷயம் ஓரளவுக்கு அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒரு வேளை ஆனந்தி தனக்கு நடந்த விஷயத்தை பற்றி சத்தியவதியிடம் கூறினால் கண்டிப்பாக அவர் அன்றைய தினம் நடந்ததை ஞாபகப்படுத்தி பார்ப்பார். அப்போது மயக்கமாக இருந்த ஆனந்தியை ஒரு ரூமுக்கு ஆன மித்ரா கூட்டி சென்றது அவர் நினைவுக்கு வரும்.

இது ஆனந்தி தேடிக் கொண்டிருக்கும் விஷயத்தை பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய ஆதாரம். அது மட்டும் இல்லாமல் தற்போது ஆனந்தி ரகுவையும் தேட முடிவெடுத்து விட்டாள்.

மித்ராவுக்கு எதிராகவும், ஆனந்திக்கு ஆதரவாகவும் சத்தியவதி சாட்சியாக மாறினால் கண்டிப்பாக ஆனந்தியின் கர்ப்பம் பற்றிய புதிர் முடிவுக்கு வரும். சத்தியவதி மற்றும் ஹாஸ்டல் வார்டன் மனோன்மணி மூலம் ஆனந்திக்கு ஏதாவது உதவி கிடைக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →