Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தீமிதி திருவிழா எபிசோட் ஆரம்பிக்க இருக்கிறது. ஆனந்தியின் ஊருக்கு வந்த நாளிலிருந்து அன்பு மற்றும் மகேஷ் இருவரும் எப்படியாவது அவர்களுடைய காதலை வெளிப்படுத்த எவ்வளவு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் ஆனந்திக்கு மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்க பிரசிடெண்ட் காத்துக் கொண்டிருக்கிறான். மித்ராவும் இந்த ஆட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டால். நேற்றைய எபிசோடில் ஒரு பக்கம் மகேஷ் தன்னுடைய காதலை ஆனந்தியின் அப்பாவிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்க சென்றான்.
அதே நேரத்தில் அன்பு முத்துவின் பேச்சை கேட்டு நான் தான் அழகன் என ஆனந்த இடம் சொல்ல முயற்சி செய்தான். அப்போதுதான் ஆனந்தியின் குடும்பத்தார் அவள் தீ மிதிக்க இருப்பதால் எல்லா பூஜைகளையும் செய்து விட்டு ஆனந்தியின் காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
எஸ்கேப் ஆன வார்டன்
ஆனந்தி தீ மிதிக்க இருப்பதால் அவளுடன் எப்பவும் போல் சகஜமாக பேசக்கூடாது என அவளுடைய அப்பா சொன்னதும் மகேஷ் மற்றும் அன்பு தன்னுடைய திட்டத்திலிருந்து பின்வாங்கிக் கொண்டார்கள். ஆனந்தியின் சொந்த ஊரில் நடக்கும் தீமிதி திருவிழாவுக்கு வந்த வார்டன், மகேஷ் உடன் நல்ல நெருக்கமாக பழகினார்.
இருந்தாலும் நிறைய விஷயங்கள் வெளியில் தெரிய வாய்ப்பிருக்கிறது என நினைத்த அவர் சென்னைக்கு செல்ல இருப்பதாக சொல்லி கிளம்பி விட்டார். எவ்வளவு சொல்லியும் வார்டன் கேட்கவில்லை. ஒரு பக்கம் ஆனந்தி திருவிழாவுக்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரசிடெண்ட் ஆனந்திக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறான்.
காதல் ஆட்டத்தில் இருந்து விலகும் மகேஷ்
திருவிழாவுக்குள் மகேசை அந்த ஊரில் இருந்து கிளப்புவதற்கு மித்ரா திட்டம் போட்டு விட்டால். கருணாகரனுக்கு போன் பண்ணி மகேஷ் தன்னுடைய காதலை பற்றி யோசிக்காத அளவுக்கு அவனுக்கு ஏதாவது பிரச்சனையை உண்டு பண்ண வேண்டும் என்று சொல்கிறாள்.
கருணாகரனின் உதவியோடு கம்பெனியில் ஏதோ ஒரு பிரச்சனையை கிளப்பி மகேசை சென்னைக்கு அனுப்ப திட்டமிட்டு விட்டால் மித்ரா. அப்படி மகேஷ் போய்விட்டால் அன்பு தான் ஆனந்தியுடன் இறுதி வரை இருக்க வேண்டிய சூழ்நிலை வரும்.
அடுத்தடுத்து ஆனந்திக்கு வரும் பிரச்சனையை அன்பு ஒரே ஆளாக தடுத்து நிறுத்தினால் கண்டிப்பாக அவளுடைய குடும்பத்தாருக்கு அன்புவை பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஊரில் நடக்கும் தீமிதி திருவிழாவுக்கு ஆனந்தியின் அண்ணன் வேலுவும் வந்து விட்டான்.
ஆனந்திக்கு ஒரு கடிதம் எழுதி தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொன்ன வேலுவை ஆனந்தி மனதார மன்னித்து விடுகிறாள். தன்னுடைய அண்ணனுக்கும் சேர்த்து தீமிதிப்பதாக அவள் கடவுள் முன் நின்று சொல்வது போல் காட்டப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் தீமிதிப்பதற்காக கட்டைகளை அடுக்கி வைத்து, விரதம் இருப்பவர்கள் அதில் வந்து எண்ணெய் ஊற்றுமாறு பூசாரி சொல்கிறார். பிரசிடெண்டின் திட்டப்படி ஆனந்தி ஊற்றும் எண்ணெயில் தான் ஏதோ கலந்து பிரச்சனை பண்ண இருக்கிறார்கள். இதை ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் இணைந்து எப்படி முறியடிக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்