புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் மிருகமாய் மாறிய மகேஷ்.. ஒரே நேரத்தில் அன்பு மற்றும் ஆனந்திக்கு ஸ்கெட்ச் போட்ட மித்ரா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் மித்ராவின் ஆட்டம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நாளுக்கு சைலன்ட் மோடில் இருந்த மித்ரா மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டாள். கருணாகரன் மற்றும் அரவிந்த் உதவியோடு அடுத்தடுத்த திட்டத்தை கச்சிதமாக முடித்து வருகிறாள்.

அன்பு மற்றும் ஆனந்தி இரண்டு பேரையும் கம்பெனியை விட்டு வெளியே துரத்த வேண்டும் என்பதுதான் மித்ராவின் தலையாய குறிக்கோளாக இப்போது மாறிவிட்டது. இவங்க ரெண்டு பேரும் குடோனுக்கு உள்ளே சிக்க வைத்த போதே , மகேஷ் வேலையை விட்டு அனுப்பி விடுவான் என்று தான் மித்ரா எதிர்பார்த்தாள்.

ஆனால் அது கைகூடாமல் போனதோடு மட்டுமில்லாமல் அவள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்து விட்டது. விட்டதை பிடித்து விட வேண்டும் என்று முழு முயற்சியுடன் இறங்கிய மித்ரா மகேஷின் அப்பாவை சாவி கொடுத்து ஆடும் பொம்மையாகவே மாற்றி விட்டாள்.

ஒரே நேரத்தில் அன்பு மற்றும் ஆனந்திக்கு ஸ்கெட்ச் போட்ட மித்ரா

பல கோடி நஷ்டம் அடைந்ததால் தற்போது தில்லைநாதன் மகேசின் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். அன்புவின் பவரை புடுங்கியது மட்டும் இல்லாமல் மகேசை அந்த பக்கமே வரவிடாமல் வைத்ததால் கார்மெண்ட்ஸ் வேலையில் கருணாகரனின் ஆட்டம் அதிகமாகிவிட்டது.

ஆனந்திக்கு லாக்கரிலிருந்து போனை எடுத்துப் பேசுகிறாள். இதை பார்த்த கருணாகரன் எரிச்சலாகி அவளுடைய போனை பிடிங்கி தூக்கி அடிக்கிறான். அந்த இடத்திற்கு வரும் மகேஷ் கருணாகரனை கேள்வி கேட்க அதற்கு அவன் இந்த போன் போனா என்ன அவளுக்கா போன் வாங்கி கொடுக்க ஆள் இல்லை என கேட்கிறார்.

இதனால் டென்ஷனான மகேஷ் கருணாகரனை கன்னத்தில் பளார் என அடைந்து விடுகிறான். சரியாக அந்த நேரத்தில் மகேஷ் அப்பா தில்லைநாதனும் வந்துவிடுகிறார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த பிரச்சனை அத்தனைக்குமே காரணம் அன்பு மற்றும் ஆனந்தி தான் என மித்ரா கொளுத்தி போடுகிறாள்.

விஷயத்தை பெருசாக்கிஅன்பு மற்றும் ஆனந்தியை வெளியில் துரத்த வேண்டும் என மித்ரா முடிவெடுத்து விடுகிறாள். அதே நேரத்தில் சுயம்புலிங்கத்துடன் சேர்ந்து மூக்கன் தன்னுடைய நிலத்தை அபகரித்ததை பற்றி அன்பு இடம் சொல்லி ஆனந்தியை அழுவது போல் இன்றைய ப்ரோமோ முடிந்து இருக்கிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News