அஜித்துக்கு ஆக்சன் சொல்லப்போகும் மகிழ் திருமேனி.. விடாமுயற்சி சூட்டிங் எப்போது தெரியுமா?

Actor Ajith: காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதே என்று பாடாத குறையாக அஜித் ரசிகர்கள் பல மாதங்களாக நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கின்றனர். துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சூட்டோடு சூடாக அடுத்த படத்தை அஜித் ஆரம்பிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இயக்குனர் மாறியதிலிருந்து அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் எல்லாம் விடாமுயற்சிக்கு சோதனை காலமாகவே இருந்தது. அதனாலேயே அஜித் நீங்கள் பிரச்சினையை முடித்துவிட்டு சொல்லுங்கள் என்று பைக்கை எடுத்துக்கொண்டு உலக பயணம் சென்று விட்டார்.

Also read: இது என்ன புது நாடா இருக்கு.? உலகம் சுற்றும் அஜித்தை ஒரே போஸ்ட்டில் அசிங்கப்படுத்திய நெட்டிசன்ஸ்

அதை அடுத்து தயாரிப்பு தரப்பு படத்தை ஆரம்பிக்க பல முயற்சிகளை மேற்கொண்டது. அது அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் தள்ளி போய் கொண்டே இருந்த நிலையில் தற்போது படம் டேக் ஆஃப் ஆக இருக்கிறது. இதுதான் இப்போது அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது.

இருந்தாலும் இதை நம்பலாமா இல்லை இதுவும் தள்ளி போகுமா என்ற சந்தேகத்திலும் அவர்கள் இருக்கின்றனர். ஆனால் தற்போது படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கான அனைத்து கட்ட வேலைகளும் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

Also read: சூட்டிங் ஆரம்பிக்குமா தெரியல? ரிலீஸ் தேதியை லாக் செய்த லைக்கா.. இருதலைக் கொள்ளி எறும்பான மகிழ்த்திருமேனி

அதன்படி படகுழு ஷூட்டிங்கை இந்த மாத இறுதியில் அபுதாபியில் ஆரம்பிக்க இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி முடித்து அடுத்த வருட கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

மேலும் இது அதிரடி ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாக இருப்பதும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. ஆக மொத்தம் அஜித்துக்கு ஆக்சன் சொல்ல போகும் மகிழ் திருமேனிக்கு இப்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Also read: திருமணத்திற்கு பின் உதவி செய்வதை கைவிட்ட அஜித்.. உண்மையான காரணத்தை கூறிய ஜெயிலர் பட நடிகர்