Chennai Rain: ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாதத்தை கடப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ரொம்பவும் அட்வான்ஸ் ஆக இருக்கிறது. நாள்கள்தான் எப்படி ஓடி அக்டோபர் மாதம் அதற்குள் வந்தது என்பதே தெரியவில்லை.
இதில் டிசம்பர் மாத மழையையும் அக்டோபர் மாதமே கொண்டு வந்திருக்கிறது இந்த வருடம். எப்போதும் போல பருவ கால மழையாக ஆரம்பித்த இந்த சீசன் தற்போது ரெட் அலர்ட் வரை சென்று இருக்கிறது. திருச்சி மற்றும் கோவை மாவட்டங்களில் நேற்று பெய்த மழை வெள்ளம் சூழ்ந்த வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.
கடல் மட்டத்திற்கு 420 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த மாவட்டங்களில் நிலைமையே இப்படி இருக்கிறது. கடல் மட்டத்திற்கு சமமாக இருக்கும் சென்னை மாவட்டம் எந்த கதியாக போகிறதோ என்பதுதான் இப்போதைய பெரிய கேள்வி.
வானிலை மையம் அறிவித்தபடி இன்று கனமழையும், நாளை மற்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழையும் பெய்ய இருக்கிறது. ஆரஞ்சு, மஞ்சள், சிகப்பு என எல்லா வண்ணத்திலும் தமிழகத்தில் வட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசு இந்த முறை எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் எப்படி தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதே மக்களின் பெரிய பயமாக இருக்கிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சில உத்தரவுகளை போட்டு இருக்கிறார்.
அதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை 18 ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்துமாறு நிறுவனங்களுக்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது.
இதைத் தாண்டி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் குடியிருப்பு வாசிகள், அன்றாட வேலைக்கு செல்பவர்கள் என்பவர்களுக்கு எந்த மாதிரியான முன்னேற்பாடுகள் எடுக்கப்படும் என இனி தான் தெரியும்.