GOAT Mohan: தமிழில் மூடுபனி படத்தின் மூலம் அறிமுகமான மோகன் பல வெள்ளி விழா படங்களை கொடுத்து, முன்னணி நடிகராக ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கே டப் கொடுத்தார். பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது “ஹரா” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்து இருக்கிறார். வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் கோட் படத்திலும் நடித்து வருகிறார்.
கோட் படத்தில் இவர் கதாபாத்திரம் என்ன என்பதை இன்னும் சஸ்பென்சாகவே இருக்கிறது. வில்லனாக நடிக்கிறாரா அல்லது ஏதாவது கௌரவத் தோற்றமா என்பதை மிகவும் சீக்ரட்டாக வைத்திருக்கின்றனர் படக்குழு. நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கொள்கையில் இருந்த மோகன் இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றால் இதில் ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது.
இந்நிலையில் இவர் நடித்த ஹாரா படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மோகன் அதிரடி ஆக்ஷனில் இந்த படத்தில் கலக்கி இருக்கிறார்.
ஆனால் இந்த படம் சரியாக பிசினஸ் ஆகவில்லை. மோகன் செகண்ட் இன்னிங்ஸில் ஆட்டம் எப்படி என்று தெரியவில்லை. அதனால் ஹரா படம் ரிலீஸ் தள்ளிப் போகிறது. கோட் படம் வந்த பிறகு நிச்சயமாக மோகனுக்கு ஒரு நல்ல மார்க்கெட் கிடைக்கும். அதன் பின் இந்த படத்தை ரிலீஸ் செய்யலாமென வைத்திருக்கிறார்கள்.
சுயம்புன்னு சுற்றலில் விட்ட பழைய மைக்
வெங்கட் பிரபு கோட் படத்தில் நடிப்பதற்காக மோகனை அணுகும் போது அவர் சும்மா ஒன்றும் இதில் நடிக்க ஒத்துக்கவில்லையாம் . விஜய் படம் இதில் நடித்தால் நமக்கு மார்க்கெட் எகிறும் என்றெல்லாம் யோசிக்க வில்லையாம். பல கேள்விகளைக் கேட்டு வெங்கட் பிரபுவுக்கு செக் வைத்துள்ளார்.
மைக் மோகன் கோட் படத்திற்காக வெங்கட் பிரபுவை சுற்றலில் விட்டிருக்கிறார். இந்த கதைக்கு நான் செட் ஆவேனா , எனக்கு என்ன கதாபாத்திரம் என்றெல்லாம் முழு ஸ்கிரிப்டையும் கேட்டு வெங்கட் பிரபுவையே ஒரு கணம் திக்கு முக்காட வைத்திருக்கிறார். முழு ஸ்கிரிப்டையும் தெரிந்த பின்னர் தனக்கு உண்டான முக்கியத்துவத்தையும் அறிந்து, பிறகு தான் அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
எப்படியாவது கோட் படத்தை விற்று விட வேண்டும் – VP
- மோகன் செகண்ட் இன்னிங்சில் வாங்கிய பெத்த காசு!
- பதறிப்போன பாண்டிச்சேரி, கோட் டீமுக்கு நோட்டீஸ்
- கோட் பட வியாபாரத்துக்கு பின்னால் உள்ள சோக கதைகள்