செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

வில்லனோட கெத்து தான் என் ஹீரோவோட மரியாதை.. சித்தார்த் அபிமன்யுவின் சீக்ரெட்டை சொன்ன மோகன் ராஜா

Payam Ravi: ஜெயம் ரவியின் திரை வாழ்வில் பெயர் சொல்ல வைத்த ஒரு படம் என்றால் அது தனி ஒருவன் தான். மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் நயன்தாரா, அரவிந்த்சாமி என பலர் நடித்திருந்தனர்.

அதில் ஹீரோ மித்ரனுக்கு ஏற்ற வில்லனாக சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரம் பொருத்தமாக செதுக்கப்பட்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் ஹீரோவை விட வில்லனை நாம் ரசித்து பார்க்கும் அளவுக்கு அந்த கேரக்டர் இருந்தது.

அதற்கேற்றார் போல் அரவிந்த்சாமியும் அதற்கு கச்சிதமாக பொருந்திப் போனார். இதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இன்று வரை இருக்கிறது அதனாலயே அடுத்த பாகத்தில் யார் வில்லனாக வரப் போகிறார்கள் என்ற ஆர்வமும் ஒரு பக்கம் இருக்கிறது.

Jayam Ravi
Aravindsamy
Mohan Raja
Thani Oruvan

இந்நிலையில் மோகன் ராஜா இந்த வில்லன் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதை பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதாவது கெத்தான ஒரு வில்லனை கொடுத்தால் தான் என்னுடைய ஹீரோவுக்கு மரியாதை இருக்கும்.

தனி ஒருவன் ரகசியம்

ஏனென்றால் கதைப்படி ஹீரோ தனக்கான வில்லனை அவரே தேர்ந்தெடுப்பார். அப்படி இருக்கும்போது அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதற்காக பல திரைப்படங்களை ரெஃபரன்ஸாக நான் எடுத்துக் கொண்டேன்.

அதில் மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படமும் ஒன்று. அதில் இறுதி காட்சியில் பரவை முனியம்மா தான் மெயின் வில்லனாக இருப்பார். அந்த இடத்தில் அவர் சிவாவை பெரிய ஹீரோவாக்க நானே வில்லனாக வந்து விட்டேன் என்று சொல்வார். இதுவும் எனக்கான ஒரு துருப்புச் சீட்டாக இருந்தது.

இப்படி பல விஷயங்களை அலசி ஆராய்ந்து தான் சித்தார்த் அபிமன்யு கேரக்டரை உருவாக்கினேன் என அவர் பல நாள் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதிலிருந்து தனி ஒருவன் படத்துக்காக அவர் எந்த அளவுக்கு தீயாக உழைத்து இருப்பார் என தெரிகிறது.

அந்த வகையில் தனி ஒருவன் 2 அறிவிப்பு வெளிவந்த நிலையில் படப்பிடிப்பு சிறிது தாமதமாகும் என கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஹீரோவுக்கு ஏற்ற வில்லனை கண்டுபிடிப்பது தான்.

ஆனால் இந்த கேரக்டருக்கு விஜய் சேதுபதி, பகத் பாசில், துல்கர் சல்மான், பிரசாந்த் போன்ற நடிகர்கள் செட் ஆவார்கள் என ரசிகர்களும் ஐடியா கொடுத்து வருகின்றனர். ஆனால் இயக்குனர் மனதில் என்ன இருக்கிறது என்பது போக போக தான் தெரியும்.

தனி ஒருவன் 2க்காக காத்திருக்கும் ஜெயம் ரவி

Trending News