திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தரமான கதையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மோகன்.. இந்த விஷயம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

தமிழ் சினிமாவில் பல வெள்ளி விழா கண்ட படங்களை கொடுத்தவர் நடிகர் மைக் மோகன். இவர் படங்களில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த வந்த மோகன் சிலகாலம் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் வெள்ளித்திரையில் கால்பதிக்க உள்ளார்.

விஜய் ஸ்ரீ இயக்கும் படத்தின் மூலம் மோகன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் பணிகள் பாரம்பரிய பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் காதல் நாயகனாக வலம் வந்த மோகன் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் மோகனின் முதல் காட்சியே ஒரு சண்டைக்காட்சியை படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் கோயமுத்தூர் மற்றும் ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில் மோகனை காதல் காட்சிகளில் மட்டுமே பார்த்த நமக்கு முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்குவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மோகன் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் பலர் கதை சொல்லியும் ஓகே சொல்லாமல் இருந்த மோகன் இப்படத்திற்கு சம்மதித்துள்ளார்.

இப்படத்தின் மையக் கருத்தாக பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதல் உதவி, குட் டச், பேட் டச் போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பதை கதை அம்சமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் ரீதியான பிரச்சனையை சந்தித்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் அதை சொல்ல தயங்குகிறார்கள். இந்நிலையில் இப்படம் அதைப்பற்றிய படமாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது பெண்களுக்கான படமல்ல, ஆண்கள் கட்டாயம் பார்க்கும்படியான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Trending News