ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நண்பன் ரஜினிகாந்தை தூக்கி வைத்த மோகன்லால்.. எதிர்ப்புகளையும் மீறி லால் சேட்டா செஞ்ச காரியம்

மோகன்லால் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் கிட்டத்தட்ட 35 வருட கால நட்பு உறவில் இருக்கிறார்கள். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் 2 படத்தில், மோகன்லால் நடித்திருப்பார். இது ஒரு பான் இந்தியா படம் என்றதால் அனைத்து மொழிகளிலும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

ஆரம்பத்தில் மோகன்லால் இந்த படத்தில் நடிப்பதற்கு மலையாள திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டது. ரஜினியை மாஸ் செய்துவிட்டு மோகன்லாலுக்கு சின்ன கேரக்டர்கள் கொடுத்து விடுவார்கள் என ஒரு பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் படத்தில் மோகன் மோகன்லாலை பார்த்த சேட்டாவின் ரசிகர்கள் மெர்சலாகினர்.

எதிர்ப்புகளையும் மீறி லால் சேட்டா செஞ்ச காரியம்

படத்தில் மோகன்லால் வரும் காட்சிகளுக்கு தமிழ் மற்றும் அனைத்து மொழிகளிலும் விசில் பறந்தது. மலையாள திரையுலகில் லால் சேட்டாவை தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.10-15 நிமிடங்கள் வந்தால் கூட மோகன்லால் நடித்த காட்சிகள் ஆர்ப்பரிக்க செய்தது.

மோகன்லால் ரசிகர்கள் லால் சேட்டா நடித்ததால் தான் ஜெயிலர் 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவும் தமிழில் சூப்பர் ஹிட் ஆனதுக்கு காரணம் இவர் தான் என்று ஆர்ப்பரித்து வந்தனர். படத்தில் மோகன்லால் தவிர தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் நடித்திருந்தார்.

இப்பொழுது பெருந்தன்மையாக மோகன்லால் பேசிய விஷயம் தான் வைரலாகி வருகிறது. தலைவர் என்றுமே ஒருத்தர்தான், அவர் ரஜினி மட்டும்தான். ரஜினி படத்தில் நடித்தது நான் செய்த பெரிய பாக்கியம். அவர் நடித்ததால் மட்டுமே படம் எல்லா மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது என நண்பன் ரஜினிகாந்தை தூக்கி வைத்து பேசியுள்ளார்.

Trending News