ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

காந்தாரா 2 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. சம்பவம் செய்வாரா ரிஷப் ஷெட்டி.!

கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர் கூட, இந்த படத்தின் தெய்வத்தை பார்த்து மெய்சிலிர்த்து போவார்கள்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான அறிவிப்பும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கின்றனர்.

காந்தாரா படம், மற்ற படங்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. கர்நாடக மாநிலத்தின் துளு பேசும் மக்கள் இன்றும் பின்பற்றி வரும் சடங்குகளில் முக்கியமான ஒன்று “பூத கோலா”. இந்த தெய்வ வழிபாட்டையும், காடுகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் அடிப்படையாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்த படத்தை இயக்கினார் ரிஷப் ஷெட்டி.

படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இதையடுத்து தமிழ், இந்தி, மலையாளம் என பிற மொழிகளில் டப் செய்யப்பட்டது. உலகளவில் இந்த படம் ரூ. 400 கோடி வசூல் சாதனை படைத்தது. ரிஷப் ஷெட்டி க்கு திருப்புமுனையாக அமைந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக 1000 கோடி வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இந்த நிலையில், காந்தாரா 2 படத்தில் சூப்பர் ஸ்டார் இணைந்துள்ளார். சூப்பர் ஸ்டார் என்ற உடன், நம் தலைவர் ரஜினிகாந்த் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால், அவர் இல்லை. இதில் இணைந்தது, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால். அவர் முக்கியமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக ரிஷப் ஷெட்டியின் தந்தை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். முக பொருத்தம் இருவருக்கும் ஒரே போல இருப்பதனால், இந்த முடிவை பட குழு எடுத்துள்ளதாம். மொத்தத்தில், படம் மிரட்ட போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Trending News