புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பணமும், அழகும் தான் எங்களுக்கு முக்கியம்.. தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் விக்கி-நயன்தாரா ஜோடி

விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி ஆறு வருட காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். நயன்தாரா திருமணத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துடன் இணைய இருக்கிறார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், நானும் ரவுடி தான் திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றும் போது காதலிக்க தொடங்கினர். அதன் பின்னர் ஒன்றாக வெளிநாடுகளுக்கு செல்வது, சமூக வலைத்தளங்களில் போட்டோ பகிர்வது என கோலிவுட் உலகத்தின் கவனிக்கத்தக்க காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். நயன்தாராவுக்கு காதல் முதல் கல்யாணம் வரை அத்தனையும் சர்ச்சை தான்.

Also Read : 4 மாதத்திலேயே இரட்டை குழந்தைக்கு தாயான நயன்தாரா.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

இப்போது அடுத்த சர்ச்சையை கிளப்பும் விதமாக நேற்று விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். திருமணம் முடிந்த ஐந்தே மாதத்தில் நயனும், விக்கியும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மா – அப்பா ஆகிவிட்டதாகவும் இந்த இரு குழந்தைகளும் எங்களுக்கு உயிரும் , உலகமும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவினால் மீண்டும் கோலிவுட்டின் ஹாட் டாக்காக மாறியிருக்கிறார்கள் இந்த ஜோடி.

நயன்தாராவின் திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே இந்த தம்பதிகள் சரகஸி என்று சொல்லப்படும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பொதுவாக இந்த சரகஸி முறையில் ஹாலிவுட், பாலிவூட் ஸ்டார்கள் நிறைய பேர் குழந்தை பெற்று இருக்கின்றனர். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் ஜோடி சரகஸி முறையில் பெண் குழந்தை பெற்று எடுத்தனர்.

Also Read : நயன்தாரா கன்னத்தில் அறைந்த நடிகை.. ஸ்கிரிப்டில் இல்லாமல் பழி வாங்கிய இயக்குனர்

ப்ரீத்தி சிந்தா, ஷில்பா ஷெட்டி, ஷாருக்கான், சன்னி லியோன், கரண் ஜோகர் என பாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் சரகஸி முறையில் குழந்தை பெற்றிருந்தாலும், தென்னிந்திய சினிமா உலகத்தில் இது போன்று யாரும் செய்தது இல்லை. நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தான் முதன் முறையாக இதை செய்து இருக்கிறார்கள். நயன்தாரா பொதுவாகவே அழகில் அதிக முக்கியத்துவம் காட்டுபவர். மேலும் நயனுக்கு பாலிவுட் என்ட்ரி கனவும் இருக்கிறது.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷின் இந்த முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும், எதிர்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. அழகிற்கும், பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து நயன்தாரா இப்படி செய்திருப்பதாக நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் இவர்களது இந்த முடிவிற்கு சரியான காரணம் தெரியவில்லை.

Also Read : காலில் விழுந்து சமாதானப்படுத்திய நயன்தாரா.. திருமணத்திற்கு பின் நடக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்

Trending News