வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கெட்டது பேசினா தான் காசு வருது, சட்டையை கிழிச்ச விஜய் சேதுபதி.. பரபரப்பை கிளப்பிய மேடை பேச்சு

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்து வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்பவுமே மிகவும் யதார்த்தமாக பேசும் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது கடந்த வாரம் சென்னையில் இருபதாவது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்றது.

அதில் விஜய் சேதுபதிக்கு மாமனிதன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது அதை பெற்றுக்கொண்ட அவர் மேதையில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசினார். அவர் கூறிய ஒரு விஷயம் தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதாவது சமீப காலமாக அவருடைய திரைப்படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

Also read: தனக்கான பாலிவுட் ஜோடியை தரமாக தேர்வு செய்த விஜய் சேதுபதி.. மெர்ரி கிறிஸ்மஸ் ட்ரண்டாகும் போஸ்டர்

இதற்கு முக்கிய காரணம் படம் வெளியாகி ஒரு காட்சி முடிந்ததுமே அதை ரிவ்யூ செல்கிறேன் என்ற பெயரில் யூடியூபில் வரும் விமர்சனங்கள் தான். ஒரு படத்தைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் தன் போக்கில் விமர்சனம் செய்யும் பலர் இருக்கிறார்கள். அதை சுட்டிக்காட்டிய விஜய் சேதுபதி யூடியூபில் கெட்டது பேசினா தான் காசு வரும்.

அதனால் விமர்சகர்களின் பார்வையில் ஒரு திரைப்படத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது. பல பேரின் அனுபவங்களையும், ஒரு மனிதனின் வாழ்க்கையையும் 3 மணி நேர திரைப்படத்தில் நம்மால் கூறிவிட முடியும். அது பார்க்கும் ரசிகர்களுக்கும் எளிதில் புரிந்து விடும். அந்த வகையில் இது விமர்சகர்களின் பார்வையில் சரியாகப் புரிந்து கொள்ளப்படுகிறதா என்பது எனக்கு தெரியவில்லை.

Also read: ஆன்ட்டி இந்தியன் வாங்காத விருதுகளா? வயிற்றெரிச்சலில் விஜய் சேதுபதியை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்

அதனால் அதை மட்டும் கேட்டுவிட்டு ஒரு படத்தை முடிவு செய்ய வேண்டாம். உங்களுடைய பார்வையில், உங்கள் வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி திரைப்படத்தை பார்க்க முயற்சி செய்யுங்கள். இதை இந்த மேடையில் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த பேச்சு மறைமுகமாக ப்ளூ சட்டை மாறனை தாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஏனென்றால் அவர்தான் ஒரு படத்தின் குறை, நிறைகளை பற்றி குறிப்பிடாமல் அனைத்து படங்களையும் நல்லா இல்லை என்பதையே விமர்சனமாக வைத்து வருகிறார்.

அவரை சுட்டிக்காட்டும் படியாக விஜய் சேதுபதியின் பேச்சு அமைந்திருக்கிறது. மேலும் அவருக்கு கிடைத்த விருது பற்றி ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் நக்கலாக குறிப்பிட்டிருந்தார். அதாவது விழா கமிட்டி, அமைச்சர் ஆகியோரை குட்டி போட்ட பூனை போல் சுற்றி இந்த விருதை அவர் வாங்கி விட்டதாக கிண்டல் அடித்து குறிப்பிட்டிருந்தார். விஜய் சேதுபதியின் இந்த மறைமுக பேச்சை ஏற்க முடியாமல் தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also read: ஒரே பட தோல்வியால் சரியும் வடிவேலுவின் கொஞ்சமா இருந்த மார்க்கெட்.. சாபத்தை பழிக்க வைத்த விஜய் சேதுபதி

Trending News