Surya: இயக்குனர் பாலா எடுக்கக்கூடிய படங்கள் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போயி தத்துரூபமாக எடுக்கக் கூடியவர். அதற்கேற்ற மாதிரி நடிக்கும் கதாபாத்திரங்களையும் படாத பாடு படுத்தி ஒரு வழியாக ஆக்கி விடுவார். அதனாலயே இவருடன் எந்த முன்னணி நடிகர்களுக்கும் செட்டே ஆகாது.
இளம் நடிகர்கள் மற்றும் புதுப்புது நடிகர்கள் மட்டும் வேறு வழி இல்லாமல் பாலா உடன் கூட்டணி வைப்பார்கள். அதனால் தான் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க இருந்த பொழுது இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இப்படத்தில் இருந்து விலகி விட்டார். அதனால் கிட்டத்தட்ட சூர்யாவிற்கு 4 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனாலும் சூர்யாவை பொருத்தவரை பணம் பெரிய விஷயமே இல்லை. போனால் போகட்டும், மரியாதையும் நிம்மதியும் தான் வேண்டும் என்று வணங்கான் படத்தை அப்படியே தலைமுழுகி விட்டார். அதன் பின்னர் தான் இயக்குனர் பாலா, அருண் விஜய்யை வைத்து எடுத்து வருகிறார். ஆனால் பருத்திவீரன் படத்தை எடுத்த அமீர்க்கு நஷ்டமாக கொடுக்க வேண்டிய 1.15 கோடி பணத்தை மட்டும் கொடுக்காமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இதில் குடும்பமானம் போனால் கூட பரவாயில்லை என்று அமீர் விஷயத்தை முடிக்காமல் இழுத்தடிப்பதற்கு காரணம் சூர்யாவின் வரட்டு கௌரவம். சூர்யா நினைத்தால் இந்த பிரச்சனை ஆரம்பத்திலேயே கிள்ளி எரிந்து இருக்கலாம். பருத்திவீரன் படத்தை எடுக்கும் பொழுது பாதியிலேயே ஞானவேல் ராஜா கழண்டு போய்விட்டார்.
அதன் பின் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்தார். பிறகு படம் அதிக வசூல் பெற்று வெற்றி அடைந்தது. அதன் பிறகும் கூட அமீர்க்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் தற்போது வரை இழுத்து பெரிய பிரச்சினையை சந்தித்து வருகிறார்.
Also read: கங்குவா உதிரனாக மாறிய பாபி தியோல்.. சூர்யாவிற்கே டஃப் கொடுக்கும் அசுரத்தனமாக போஸ்டர்