மத்தியிலும், மற்ற பிற வட இந்திய மாநிலங்களில் தற்போது உறுதியாக காலூன்றியுள்ள பா.ஜ.க அரசிற்கு தென்னிந்தியாவில் பெரிதாக தங்களது கட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. அரசியல் சூழ்நிலைகளால் கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்த போதிலும் தமிழகத்தில் இப்போது வரை ஒரு மாநிலங்களவை உறுப்பினரை கூட பெற முடியாத நிலையிலுள்ளது.
இங்குள்ள பெரிய சினிமா ஜாம்பவான்களான இளையராஜாவும், நடிகர் இயக்குநர் பாக்கியராஜூம் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பேசியிருந்தனர். புத்தகம் ஒன்றில் அம்பேத்கரும் மோடியும் ஒன்று என இளையராஜா புத்தகம் ஒன்றில் முன்னுரை எழுதியிருந்தார். அதற்கு பல தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது.
இந்த பிரச்சினையில் இளையராஜாவிற்கு ஆதரவாக பேசிய பாக்கியராஜ் ” மோடியை பற்றி விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” எனக் கூறி இன்னமும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். இது நேரடியாக பல தமிழக அரசியல்வாதிகளை எதிர்த்து விதமாக அமைந்துள்ளது.
இந்த விஷயத்தை உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள் சிலர் இதன் பின்னாலுள்ள பா.ஜ.கட்சியின் தந்திர செயலை கூறி வருகின்றார்கள். நேரடியாக அரசியல்வாதிகள் மூலம் இங்கு பெரிதாக தாக்கம் ஏற்படுத்த முடியாத பா.ஜ.க அரசு சினிமாவின் மூலம் பிரபலமான, மக்களுக்கு பரிட்சயமான முகங்களை முன்னிறுத்தி வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவெடுத்துளதாக அவர்கள் விமர்சிக்கின்றனர்.
சினிமா நட்சத்திரங்களான பார்த்திபன், விஷால், சமுத்திரக்கனி போன்றோரை அந்த கட்சி ஏற்கனவே அணுகியிருந்தது. இவர்களில் யாரெல்லாம் அந்த கட்சிக்கு ஆதரவாக உள்ளனர் என இப்போது வரை வெளியில் தெரியவில்லை. அந்த கட்சியில் சேர்வதற்கு அவர்கள் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அடுத்த தேர்தலுக்கான ஆயுத்தமாக பா.ஜ.க அரசு இந்த முயற்சிகளை செய்து வருவதாக விமர்சனங்கள் வைக்க படுகிறது. இதே போலவே, மற்ற மாநிலங்களிலும் பிரபலமான நடிகர்கள் மூலம் அந்த கட்சி ஏற்கனவே வேலைகள் செய்திருப்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவில் சுரேஷ் கோபி, ஹிந்தியில் அக்ஷய் குமார், கஜோல், முதலான பிரபலங்களை வைத்து அந்த மாநிலங்களை தேர்தலை சந்தித்துருப்பது நடந்த விஷயங்களே.