செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

காசு, பணம், துட்டு, மனி, மனி.. படம் ஓடலானாலும், விஜய் சேதுபதி நிரப்பி வரும் கல்லா பெட்டியின் ரகசியம்

நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி, தற்போது தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டே வரும் விஜய் சேதுபதி, எப்போதுமே படு பிசியாக வலம் வருபவர். தற்போது வரை தன் கைவசம் 20 க்கும் மேற்பட்ட படங்களை வைத்துக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

ஆனால் அண்மைக்காலமாக இவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெளியாகாமல் உள்ளது. கடைசியாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த டி.எஸ்.பி திரைப்படம் வெளியாகி படு தோல்வியான நிலையில், இன்னும் இவரது நடிப்பில் எந்த ஒரு தமிழ் படத்தின் அப்டேட்டும் வராமல் உள்ளது. ஆனால் பாலிவுட்டில் விஜய் சேதுபதி போலீசாக நடித்துள்ள பார்சி வெப் சீரீஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

Also Read: விஜய் சேதுபதியுடன் இணையும் கௌதம் மேனன்.. இந்த படமாவது முடிச்சு வெளி வருமா.?

இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அதிக சம்பளம் வாங்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அதற்கான காரணம் வெளியாகி வைரலாகியுள்ளது. விஜய் சேதுபதி சாதாரண குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கைக்காக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலைக்கு சென்று வாழ்ந்து வந்தவர். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் மக்கள் மனதில் இடம்பெற்று இன்று தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

மேலும் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு வெற்றியோ, தோல்வியோ ஒரு கை பார்த்து விடலாம் என்ற நோக்கத்தில் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் படு தோல்வியடைந்து தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டுக்கொண்டு சென்றனர். அப்போது கூட இவர் தனது சம்பளத்தை குறைக்கவில்லை.

Also Read: வியாபாரம் ஆகாத விஜய் சேதுபதி.. தயாரிப்பாளர்கள் தெரித்து ஓடும் கொடுமை.!

இன்னும் சொல்ல போனால் சம்பளத்தை பல கோடிகள் வரை உயர்த்திக்கொண்டு தான் செல்கிறார். இதற்கான காரணம் விஜய் சேதுபதிக்கு சினிமா தான் எல்லாவற்றையும் அவரது வாழ்க்கையில் தந்தது. இதை விட்டால் மறுபடியும் முதலில் இருந்து சினிமாவில் ஆரம்பித்த இடத்திற்கு தான் செல்வார். ஆக மொத்தம் சினிமாவில் தான் இருப்பார் என்பதால் தனது சம்பளத்தை உயர்த்திக்கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.

இவர் சம்பாரிக்கும் பணம் அத்தனையும் சேர்த்து வைத்துவிட்டு சில வருடங்கள் கழித்து வாய்ப்பு இல்லாமல் போகும் சமயத்தில், சம்பாதித்த பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்ட விஜய் சேதுபதி திட்டம் தீட்டியுள்ளார். மேலும் 30 கோடி வரை சம்பளம் வாங்கும் இவர், இன்னும் கொஞ்சம் நாட்களில் தனது சம்பளத்தை இரட்டிப்பாக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Also Read: விஜய் சேதுபதி பெயரைக் சந்தி சிரிக்க வைத்த பிரபலம்.. கேடுகெட்ட வேலையை செய்த காமெடியன்

Trending News